IND vs PAK : இந்தியா பாகிஸ்தான் போட்டியில் நடைபெற்ற அரிதான நிகழ்வு – இப்படி நடப்பது இதுவே முதல் முறையாம்

PAK
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி கண்டி நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஏற்கனவே வெளியான வானிலை அறிக்கையின் படி போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதை அறிவித்தும் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது பாகிஸ்தான அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இஷான் கிஷன் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோரது பார்ட்னர்ஷிப் காரணமாக ஐந்தாவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்து ஓரளவு நல்ல நிலையை எட்டியது.

- Advertisement -

அதன் பிறகு பின்னால் வந்த வீரர்களும் ஓரளவு கை கொடுக்க இறுதியில் இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 266 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 82 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 87 ரன்களையும் குவித்து அசத்தினர்.

அதனை தொடர்ந்து 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட இருக்கும் வேளையில் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் முன்பு எப்போதும் நடைபெறாத ஒரு அரிதான நிகழ்வு அரங்கேறியுள்ளது. அந்த வகையில் இந்திய அணிக்கு எதிராக இதுவரை பாகிஸ்தான அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முழுவதுமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதே கிடையாது. ஆனால் செப்டம்பர் 2-ஆம் தேதி இன்று கண்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மூன்று பேருமே சேர்ந்து 10 விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.

இதையும் படிங்க : IND vs PAK : சரிந்த இந்தியாவை தூக்கி நிறுத்திய 2 இளம் புலிகள், சவாலான ஸ்கோரை – நிர்ணயித்தது எப்படி?

அந்த வகையில் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா மூன்று விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவூப் மூன்று விக்கட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் சதாப் கான், நவாஸ், ஆகா சல்மான் ஆகிய மூவரும் விக்கெட் எதுவும் எடுக்காமல் ரன்களை வாரி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement