35000 பேர் உட்கார கூடிய மைதானத்தில் வெறும் 7000 பேர்மட்டுமே வருகை. வெறிசோடிய இந்தியா பாக் போட்டி – என்ன காரணம்?

IND-vs-PAK
- Advertisement -

எப்பொழுதுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிகள் உலகில் எங்கு நடைபெற்றாலும் மைதானம் நிரம்பி வழியும். ஆனால் இலங்கையின் கொழும்பு நகரில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் போர் சுற்று போட்டியான இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பார்வையாளர்கள் இன்றி மைதானம் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய இரண்டு அணிகளாக பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் காலம் காலமாக நல்ல வரவேற்பினை பெற்று வரும்.

- Advertisement -

ஆனால் இன்று நடைபெற்று வரும் இந்த போட்டியில் ரசிகர்கள் பெரிய அளவில் மைதானத்தில் இல்லாதது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. மொத்தம் 35 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டுகளிக்க கூடிய இந்த மைதானத்தில் வெறும் 7000 ரசிகர்கள் மட்டுமே வந்துள்ளனர். அதனால் மைதானத்தில் பெரும்பாலான கேலரிகள் காலியாகவே இருப்பதை காண முடிந்தது.

இப்படி பார்வையாளர்களின் ஆதரவு இந்த போட்டியில் குறைய என்ன காரணம்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வரும் இலங்கையில் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விலை இந்திய மதிப்பில் 250 ரூபாயில் இருந்து வந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது ஆசிய கோப்பை லீக் போட்டிகளுக்காக விற்கப்பட்ட டிக்கெட்டின் விலை 40 மடங்கு அதிகரிக்கப்பட்டு 10 ஆயிரம் ரூபாய்-க்கு விற்கப்பட்டுள்ளது. இப்படி அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டதாலேயே ரசிகர்கள் கூட்டம் விலகியுள்ளதாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : IND vs PAK : ஹபீஸ் – ஜம்சேத் 11 வருட சாதனையை தூளாக்கி ஆசிய கோப்பையில் புதிய வரலாற்றை எழுதிய விராட் கோலி – கேஎல் ராகுல்

மேலும் இதுகுறித்து பேசிய ரசிகர்கள் பலர் : நாங்கள் இதே மைதானத்தில் 200 ரூபாய்க்கு போட்டியை பார்த்திருக்கிறோம். ஆனால் இப்பொழுது 40 மடங்கு விலை அதிகரித்துள்ளது அதனால் நாங்கள் டிவியில் பார்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement