IND vs PAK : அட என்னடா இது? இப்படி நடந்து போச்சி. யாரும் எதிர்பாரா ட்விஸ்டுடன் முடிந்த – இந்தியா பாகிஸ்தான் போட்டி

IND-vs-PAK-Asia-Cup
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று செப்டம்பர் 2-ஆம் தேதி கண்டி மைதானத்தில் துவங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய லீக் போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டு முடிவு ஏதும் அறிவிக்கப்படாமல் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதன்படி இன்று மதியம் 3 மணி அளவில் துவங்கிய இந்த போட்டியில் ராசில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியும் பாகிஸ்தான் அணியின் அட்டகாசமான வேகப்பந்து வீச்சை எதிர்த்து ஆரம்பத்தில் பெரிய அளவில் தடுமாறியது. ரோகித் சர்மா, சுட்மன் கில், விராட் கோலி என அனைவருமே பாகிஸ்தான அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

இருப்பினும் இஷான் கிஷன் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். பின்னர் இறுதியில் இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்களை மட்டுமே குவித்தது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹார்திக் பாண்டியா 87 ரன்களையும், இஷான் கிஷன் 82 ரன்களையும் குவித்தனர். பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட தயாராகியது. ஆனால் இந்திய அணி பேட்டிங் செய்து முடித்த பின்னர் சுமார் 2 மணி நேரங்களுக்கும் மேலாக மழை நிற்காமல் பெய்து வந்தது.

- Advertisement -

இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் வீரர்கள் பேட்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை. மேலும் ஓவர்கள் குறைக்கப்பட்டாவது போட்டி நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் மைதானத்தை பார்வையிட்ட அம்பயர்கள் இனிமேலும் போட்டியை நடத்த முடியாது என்று அறிவித்து போட்டி எந்த ஒரு முடிவும் இன்றி கைவிடப்பட்டதாக அறிவித்தனர்.

இதையும் படிங்க : IND vs PAK : இந்தியா பாகிஸ்தான் போட்டியில் நடைபெற்ற அரிதான நிகழ்வு – இப்படி நடப்பது இதுவே முதல் முறையாம்

அதன்பிறகு வீரர்களும் தங்களுக்குள் கைகுலுக்கி விடை பெற்றனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் காணப்பட்ட வேளையில் கடைசியில் போட்டி மழையால் தடைப்பட்டு முடிவுக்கு வந்தது அனைவருமே ஏமாற்றமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement