IND vs PAK : அப்பாடா ஒருவழியா நல்ல நியூஸ் வந்தாச்சி. இன்றைய போட்டி குறித்து வெளியான – முக்கிய அப்டேட்

Babar-and-Rohit
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் போட்டியானது இன்று கண்டி மைதானத்தில் மதியம் 3 மணி அளவில் துவங்க உள்ளது. ஏற்கனவே ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியான போதே இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டி பெரிய அளவில் வரவேற்பினை பெற்றிருந்தது.

இவ்வேளையில் திட்டமிட்டபடி இந்த போட்டி நடைபெறுவதில் சிக்கல் இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. அந்த வகையில் போட்டி நடைபெறும் நாளான இன்று செப்டம்பர் இரண்டாம் தேதி 90 சதவீதம் வரை கண்டி நகரில் மழை வாய்ப்பு உள்ளதால் போட்டி நடப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது.

- Advertisement -

ஏற்கனவே ஐசிசி தொடர்கள், ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் இந்த போட்டியும் மழையால் நடத்தப்பட முடியாமல் போனால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விடயமாக மாறும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது இன்று செப்டம்பர் இரண்டாம் தேதி வெளியான வானிலை அறிக்கை தற்போது ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியாகவே மாறி உள்ளது. ஏனெனில் கடந்த இரண்டு நாட்களாகவே மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருந்த வேளையில் இன்று வெளியான வானிலை அறிக்கையின் படி :

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா ஜெயிக்கும்ன்னு சொல்ல ஆசையா தான் இருக்கு ஆனா – பாகிஸ்தான் போட்டி பற்றி ரவி சாஸ்திரி ஓப்பன்டாக்

கண்டி நகரில் இன்று மழை பெய்ய 67 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டாயம் போட்டி நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன என்றும் கண்டிப்பாக இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும் ஓவர்கள் குறைக்கப்பட்டாவது போட்டி நடைபெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement