கொழும்புவின் ராஜாவாக ஹாசிம் அம்லா சாதனை சமன் – 350 ரன்கள் அடிப்பதில் தோனியை முந்தி கிங் கோலி தனித்துவ உலக சாதனை

Virat kohli 87
- Advertisement -

இலங்கையின் கொழும்பு நகரில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற 2023 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. அந்தப் போட்டியில் மழைக்கு மத்தியில் 2 நாட்கள் பேட்டிங் செய்த இந்தியா சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 356/2 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 56, சுப்மன் கில் 58, விராட் கோலி 122*, கேஎல் ராகுல் 111* என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஷாஹீன் அப்ரிடி உட்பட அனைத்து பாகிஸ்தான் பவுலர்களையும் அபாரமாக எதிர்கொண்டு பெரிய ரன்களை குவித்தனர்.

அதை தொடர்ந்து 357 ரன்களை துரத்திய பாகிஸ்தான் ஆரம்ப முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்க பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 32 ஓவரில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு கேப்டன் பாபர் அசாம் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக பகார் ஜமான் 27 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட் எடுத்து வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

அபாரமான சாதனைகள்:
முன்னதாக இந்த போட்டியில் அதிவேகமாக 13000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்து புதிய சரித்திரம் படைத்த விராட் கோலி போட்டி நடைபெற்ற கொழும்பு மைதானத்தில் தொடர்ந்து 4வது முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்து அசத்தினார். அதாவது கொழும்புவில் இருக்கும் ஆர் பிரேமாதாச கிரிக்கெட் மைதானத்தில் 2012, 2017, 2017 ஆகிய வருடங்களில் கடைசியாக களமிறங்கிய 3 ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக முறையே அவர் 128*, 131, 110* என 3 போட்டிகளிலும் சதமடித்திருந்தார்.

அந்த நிலைமையில் இப்போட்டியிலும் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்பட்டு தரமான பாகிஸ்தான் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 122* ரன்கள் குவித்த அவர் கொழும்பு மைதானத்தில் 4 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக சதமடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சதங்கள் அடித்த வீரர் என்ற தென்னாபிரிக்காவின் நட்சத்திர முன்னாள் வீரர் ஹாசிம் அம்லாவின் மாபெரும் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் விராட் கோலியை போலவே தென்னாப்பிரிக்காவில் இருக்கும் செஞ்சூரியன் மைதானத்தில் ஹாசிம் ஹம்லாவும் 4 சதங்கள் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். அந்த வரலாற்றை தற்போது சமன் செய்துள்ள விராட் கோலி இப்போட்டியில் இந்தியா 362 மேற்பட்ட ரன்கள் குவிப்பதற்கும் கருப்பு குதிரையாக திகழ்ந்தார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 350க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அணியில் அதிக முறை ஒரு அங்கமாக இருந்த வீரர் என்ற எம்எஸ் தோனியின் சாதனை உடைத்துள்ள விராட் கோலி தனித்துவமான உலக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: IND vs PAK : 66/4 என மிரட்டிய பாகிஸ்தானை 15 வருடம் கழித்து ஓடவிட்ட இந்தியா – வரலாறு காணாத சரித்திர சாதனை வெற்றி

அதாவது தம்முடைய கேரியரில் 21 முறை இந்தியா 350 அல்லது அதற்கும் மேற்பட்ட மேற்பட்ட ரன்கள் அடித்த இன்னிங்ஸில் ஒரு வீரராக பேட்டிங் செய்து விராட் கோலி இந்த சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 21*
2. எம்எஸ் தோனி : 20
3. ஏபி டீ வில்லியர்ஸ்/இயன் மோர்கன் : தலா 19

Advertisement