IND vs PAK : 66/4 என மிரட்டிய பாகிஸ்தானை 15 வருடம் கழித்து ஓடவிட்ட இந்தியா – வரலாறு காணாத சரித்திர சாதனை வெற்றி

- Advertisement -

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 356 ரன்கள் குவித்து மிரட்டியது. மழையால் ரிசர்வ் நாள் உட்பட 2 நாட்கள் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா 56 ரன்களும் சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

அவர்களை விட 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் 233 நாட்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய கேஎல் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்து சதமடித்து 111* (106) ரன்கள் விளாசி அபாரமான கம்பேக் கொடுத்தார். அவருடன் மறுபுறம் தமது பங்கிற்கு தமக்கு மிகவும் பிடித்த பாகிஸ்தானை அபாரமாக எதிர்கொண்ட விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 47வது சதத்தை அடித்து 122* (94) ரன்கள் குவித்த அசத்தினார்.

- Advertisement -

வரலாறு காணாத வெற்றி:
அதை தொடர்ந்து 357 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் இழந்து 32 ஓவர்களில் 128 ரன்களுக்கு சுருண்டது. குறிப்பாக பாபர் அசாம் 10, முகமது ரிஸ்வான் 2, சடாப் கான் 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக பகார் ஜாமான் 27 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை எளிதாக்கினார். அதன் காரணமாக 228 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா இத்தொடரின் சூப்பர் 4 புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்து ஃபைனல் வாய்ப்பை ஆரம்பத்திலேயே உறுதி செய்துள்ளது.

- Advertisement -

அதை விட இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்துள்ளது. குறிப்பாக 15 வருடத்திற்கு முன் கடந்த 2008ஆம் ஆண்டு தாக்காவில் அதிகபட்சமாக 140 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்த இந்தியா வரலாற்றில் முதல் முறையாக இப்போட்டியில் 200 ரன்களுக்கு மேல் தோற்கடித்து புதிய சரித்திர வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த பட்டியல்:
1. 228 ரன்கள் – கொழும்பு, 2023*
2. 140 ரன்கள் – தாக்கா, 2008
3. 124 ரன்கள் – பர்மிங்காம், 2017

இதையும் படிங்க: IND vs PAK : சுழலில் பாகிஸ்தானை சுருட்டிய குல்தீப் – ஆசிய கோப்பையில் 35 வருடத்துக்கு பின் அபார சாதனை, சச்சினுக்கு நிகராக அசத்தல்

அதிலும் குறிப்பாக இதே தொடரின் லீக் சுற்றில் மோதிய போது ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற டாப் பேட்ஸ்மேன்களுக்கு சாகின் அப்ரிடி போன்ற பவுலர்கள் பெரிய சவாலை கொடுத்து 66/4 என்ற திண்டாட்டமான துவக்கத்தை பரிசளித்தனர். ஆனால் அப்போட்டியில் இஷான் கிசான் – பாண்டியா போராட்டத்திற்கு பின் மழை வந்த நிலையில் இப்போட்டியில் அதே பவுலர்களை விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் அதிரடியாக எதிர்கொண்டு தக்க பதிலடி கொடுத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியை வைத்துள்ளது.

Advertisement