IND vs PAK : இந்தியா – பாக் சூப்பர் 4 போட்டி நடைபெறும் பிரேமதாசா மைதானம் எப்படி? புள்ளிவிவரம் – பிட்ச், வெதர் ரிப்போர்ட்

R Premadasa Colombo Stadium
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் தன்னுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தானை தங்களுடைய முதல் போட்டியில் இந்தியா எதிர்கொள்கிறது. ஆசிய கண்டத்தின் டாப் 2 அணிகளாகவும் பரம எதிரிகளாகவும் திகழும் இவ்விரு அணிகள் ஏற்கனவே இத்தொடரில் லீக் சுற்றில் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக அப்போட்டியில் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட பாகிஸ்தான் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சிதைத்து 66/4 என ஆரம்பத்திலேயே இந்தியாவை தெறிக்க விட்டது.

ஆனால் அதற்கு வளையாத இந்தியா மிடில் ஆர்டரில் இசான் கிசான் – ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் 267 என்ற நல்ல வெற்றி இலக்கை நிர்ணயித்தது. எனவே அப்போட்டியில் தவறவிட்ட வெற்றியை இம்முறை பெறுவதற்கு தயாராகும் இவ்விரு அணிகள் மோதும் இந்த சூப்பர் 4 போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகரில் இருக்கும் ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

பிரேமதாசா மைதானம்:
இது மட்டுமல்லாமல் இலங்கை, வங்கதேசத்துக்கு எதிரான இந்தியாவின் சூப்பர் 4 போட்டிகளும் நடைபெறும் இம்மைதானம் 1986இல் தோற்றுவிக்கப்பட்டு 35000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை வரலாற்றில் 155 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 46 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 23 வெற்றிகளையும் 19 தோல்விகளையும் பதிவு செய்துள்ள நிலையில் 4 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

1. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (1096) அடித்த மற்றும் அதிக சதங்கள் (4) அடித்த இந்திய வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்துள்ளார். அதே போல அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராகவும் சச்சின் சாதனை படைத்துள்ளார். 138, இலங்கைக்கு எதிராக, 2009.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக 33 விக்கெட்களுடன் ஹர்பஜன் சிங் சாதனை படைத்துள்ளார். சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலராக ஆஷிஸ் நெஹ்ரா இருக்கிறார். 5/56, இலங்கைக்கு எதிராக, 2005. இம்மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 375. குறைந்தபட்ச ஸ்கோர் : 103

வெதர் ரிப்போர்ட்:
கொழும்பு நகரில் செப்டம்பர் 10ஆம் தேதி சராசரியாக 90% இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்போட்டிக்கு ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்பை விட தற்போது அங்கு வானிலை முன்னேறி வருவதால் இப்போட்டி நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
இம்மைதானம் வரலாற்றில் பேட்ஸ்மேன்கள் மற்றும் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் சூழ்நிலைகளை புரிந்து நிலைத்து நின்று விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிக்க முடியும். ஆனால் நேரம் செல்ல செல்ல ஸ்பின்னர்கள் மற்றும் மிதவேக பவுலர்கள் அதிக ஆதிகத்தை செலுத்துவார்கள்.

இதையும் படிங்க: சச்சின் மற்றும் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்ட கோல்டன் டிக்கெட் மூலம் கிடைக்கப்போகும் – சலுகைகள் என்னென்ன?

அதனாலேயே இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 232 ரன்களாகவும் 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 191 ரன்களாக இருக்கிறது. அத்துடன் இங்கு வரலாற்றில் நடைபெற்ற 155 போட்டிகளில் 84 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 61 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் எடுப்பது வெற்றியை கொடுக்கலாம்.

Advertisement