விராட் கோலி இல்ல, பாக் அணிக்கெதிரான போட்டியின் உண்மையான ஆட்டநாயகன் இவர்தான் – கம்பீர் மீண்டும் விமர்சனம்

Gautam gambhir Virat Kohli
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் மழைக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த முக்கியமான சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இலங்கையின் கொழும்பு நகரில் செப்டம்பர் 10ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 356/2 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 56, சுப்மன் கில் 58, விராட் கோலி 122*, கேஎல் ராகுல் 111* என டாப் 4 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவித்தனர்.

அதிலும் குறிப்பாக இதே தொடரின் லீக் சுற்றில் தங்களை மிரட்டிய சாகின் அப்ரிடி போன்ற பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்ட இந்திய பேட்ஸ்மேன்கள் தக்க பதிலடி கொடுத்தது இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்தது. அதைத்தொடர்ந்து 357 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்த வேண்டிய அழுத்தத்தில் ஆரம்பம் முதலே இந்தியாவின் நேர்மையான பந்து வீச்சில் தடுமாறிய பாகிஸ்தான் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 32 ஓவரில் 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

கம்பீர் விமர்சனம்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக பக்கார் ஜமான் 27 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த வகையில் இந்த வெற்றிக்கு அனைவருமே முக்கிய பங்காற்றியிருந்தாலும் பேட்டிங்கில் 129.79 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் 122* (94) ரன்கள் குவித்து அசத்திய விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி அல்லது குணமடைந்து சதமடித்து கம்பேக் கொடுத்த கேஎல் ராகுல் ஆகியோரை விட குல்தீப் யாதவ் தான் உண்மை பொறுத்த வரை உண்மையான ஆட்டநாயகன் என்று கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னை பொறுத்த வரை குல்தீப் யாதவ். அவரைத் தாண்டி நீங்கள் பார்க்க முடியாது”

- Advertisement -

“மேலும் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சதமும் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் நல்ல ரன்களும் அடித்தார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் ஸ்விங் மற்றும் வேகத்துக்கு சாதகமான இது போன்ற மைதானங்களில் 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் எடுப்பது கடினமாகும். அதிலும் குறிப்பாக சுழலை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் வீசிய பவுலிங் தான் வெற்றியை மாற்றியது”

இதையும் படிங்க: IND vs PAK : 100 டெஸ்ட் ஆடுன எனக்கு இது தெரியாதா? ஆட்டநாயகன் விராட் கோலி அளித்த – அசத்தலான பேட்டி

“அது தான் அவர் எந்தளவுக்கு தரமான பவுலர் என்பதையும் காட்டுகிறது. குறிப்பாக அவர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு காற்றில் சுழல வைத்து பெரிய சவாலை கொடுத்தார். அது உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நல்ல அம்சமாகும். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக போட்டியின் எந்த சூழ்நிலையிலும் விக்கெட் எடுக்கும் திறமை அவரிடமும் இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை சிறப்பாக செயல்பட்டும் அவர் இப்படி விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement