இந்தியா – நியூஸிலாந்து போட்டியில் வெல்லபோவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன? – விரிவான அலசல்

IND vs NZ 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி மதியம் 2 மணிக்கு தரம்சாலா நகரில் இதுவரை களமிறங்கிய 4 போட்டிகளிலும் 4 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இப்போட்டியை பொறுத்த வரை நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தால் விளையாட மாட்டார் என்பது பெரிய பின்னடைவாகும்.

ஆனால் அந்த குறை கொஞ்சம் கூட தெரியாத அளவுக்கு ஏற்கனவே இத்தொடரில் 3 போட்டிகளில் நியூசிலாந்தை வெற்றிகரமாக வழி நடத்திய டாம் லாதம் கேப்டன்ஷிப் அனுபவத்தை கொண்டிருப்பதுடன் மிடில் ஆர்டரில் நல்ல பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் வில் எங், டேவோன் கான்வே, ரச்சின் ரவீந்திர ஆகியோர் டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடி இந்திய பவுலர்களுக்கு சவாலை கூடியவர்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

வெல்லப்போவது யார்:
அதில் கான்வே ஐபிஎல் தொடரில் விளையாடி இந்தியாவின் சூழ்நிலைகளின் நன்கு தெரிந்து வைத்துள்ள நிலையில் மிடில் ஆர்டரில் டார்ல் மிட்சேல், மார்க் சாப்மேன், கிளன் பிலிப்ஸ் ஆகியோர் தரமான பேட்ஸ்மேன்களாக அறியப்படுகின்றனர். இதில் கிளன் பிலிப்ஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடும் தன்மையும் தேவைப்படும் போது சுழல் வீசும் திறமையும் கொண்டுள்ளார். அதை விட ட்ரெண்ட் போல்ட், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன் ஆகியோர் வேகத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என்று சொல்லலாம்.

அதிலும் ட்ரெண்ட் போல்ட்டின் புதிய ஸ்விங் பந்துகளை திறம்பட எதிர்கொள்ளாமல் போனால் இந்தியா தோல்வியையும் சந்திக்கலாம். இவர்களுடன் மிட்சேல் சான்ட்னர் மிகச் சிறந்த சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக இந்த உலகக்கோப்பையில் அசத்தி வருவதைப் போல இப்போட்டியிலும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்க உள்ளார். மறுபுறம் இந்திய அணியில் ரோஹித் சர்மா, கில், விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் நல்ல ஃபார்மில் பேட்டிங் துறைக்கு வலு சேர்க்கிறார்கள்.

- Advertisement -

இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் சற்று தடுமாற்றமாக செயல்பட்டு வருவதும் பேட்டிங், பவுலிங் துறையில் சமநிலையை கொடுக்கக்கூடிய பாண்டியா காயத்தால் விளையாட மாட்டார் என்பது பெரிய பின்னடைவாகும். ஆனாலும் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பெரிய நம்பிக்கை கொடுக்கும் நிலையில் நியூசிலாந்தின் சான்ட்னரை விட குல்தீப் யாதவ் மிகவும் தரமான ஸ்பின்னராக அறியப்படுகிறார்.

அவர்களுடன் பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் திறமையைக் கொண்டிருக்கின்றனர். எனவே சில குறைகள் இருந்தாலும் இப்போட்டியில் இரு அணிகளுமே வெற்றியை பெறும் அளவுக்கு சம பலத்துடன் மோத உள்ளது. அதில் காலம் காலமாக ஐசிசி தொடரில் 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல் உட்பட பெரிய சவாலை கொடுத்து வரும் நியூசிலாந்தை தோற்கடிக்க 3 துறைகளிலும் இந்தியா சொந்த மண்ணில் அசத்துவது அவசியமாகும்.

- Advertisement -

வரலாற்று புள்ளி விவரம்:
1. ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை மோதிய 116 போட்டிகளில் இந்தியா 58 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. நியூசிலாந்து 50 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் 7 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. 1 போட்டி டையில் முடிந்தது. குறிப்பாக உலகக் கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகள் மோதிய 9 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று நியூசிலாந்து வலுவாக இருக்கிறது. இந்தியா 3 வெற்றிகளை பெற்ற நிலையில் 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

2. இருப்பினும் 2003க்குப்பின் நியூசிலாந்திடம் அனைத்து ஐசிசி தொடர்களிலும் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் (1750) அடித்த இந்திய வீரராக சச்சின் டெண்டுல்கரும் அதிக சதங்கள் (6) அடித்த இந்திய வீரராக விரேந்திர சேவாக்கும் அதிகபட்ச ஸ்கோர் (208) பதிவு செய்த வீரராக சுப்மன் கில்லும் சாதனை படைத்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியா – நியூஸிலாந்து போட்டியில் வெல்லபோவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன? – விரிவான அலசல்

3. அதேபோல ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்களை (51) எடுத்த இந்திய வீரராக ஜவகர் ஸ்ரீநாத் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த இந்திய வீரராக (5/18) அமித் மிஸ்ரா சாதனை படைத்துள்ளனர். நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பதிவு செய்து அதிகப்பட்ச ஸ்கோர் 392 ரன்களாகும்.

Advertisement