இந்தியா – நியூசிலாந்து போட்டி நடைபெறும் தரம்சாலா மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Dharamsala
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டிலில் 2வது இடத்தில் இருக்கிறது. இதை தொடர்ந்து இந்தியா தங்களுடைய 5வது போட்டியில் தங்களை போலவே இதுவரை தோல்வியை சந்திக்காமல் முதலிடத்தில் இருக்கும் வலுவான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

அதில் கேன் வில்லியம்சன் காயத்தால் விளையாட மாட்டார் என்றாலும் டாம் லாதம் தலைமையில் டேவோன் கான்வே, ரச்சின் ரவீந்தரா, கிளன் பிலிப்ஸ், சான்ட்னர், ட்ரெண்ட் போல்ட், பெர்குசன் என ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்டுள்ள நியூசிலாந்து மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்றே சொல்லலாம். மறுபுறம் ஏற்கனவே ஐசிசி தொடர்களில் 2019 உலக கோப்பை செமி ஃபைனல் போல நியூசிலாந்திடம் திண்டாடி வரும் இந்தியா இம்முறை பாண்டியா இல்லாமல் வெற்றிக்கு போராட தயாராகியுள்ளது.

- Advertisement -

தரம்சாலா மைதானம்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி அக்டோபர் 22ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அழகான தரம்சாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1317 அடி உயரத்தில் சுற்றிலும் அழகான பனிமலை தொடர்களால் சூழப்பட்ட இந்த அழகிய மைதானம் 23000 ரசிகர்கள் அமரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் இங்கு 7 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

குறிப்பாக 2016இல் இங்கு நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்துள்ளது. இங்கு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (212) அடித்த வீரராக விராட் கோலியும் அதிக விக்கெட்டுகளை (4) பதிவு செய்த இந்திய வீரராக ஹர்திக் பாண்டியாவும் முதல் இடத்தில் இருக்கின்றனர். இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் : 330/6, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2014.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
அக்டோபர் 22ஆம் தேதி தரம்சாலா நகரில் 20% மட்டுமே மழை வருவதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம். அத்துடன் வானம் நல்ல மேகமூட்டத்துடன் குறைவான வெப்பமே நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்:
தரம்சாலா மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல சாதகத்தை கொடுத்து வருகிறது. குறிப்பாக இங்கு குளிரான மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும் என்பதால் ஸ்விங் பவுலர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே சூழ்நிலைகளை உணர்ந்து பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினால் எளிதாக பெரிய ரன்களையும் குவிக்கலாம். அதே சமயம் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள்.

இதையும் படிங்க: இந்தியா – நியூஸிலாந்து போட்டியில் வெல்லபோவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன? – விரிவான அலசல்

மேலும் இங்கு நடைபெற்ற 7 போட்டிகளில் 4 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 3 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. ஆனால் இங்கு 231 ரன்களாக இருக்கும் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 2வது இன்னிங்ஸில் 199 ரன்களாக குறைகிறது. எனவே தென்னாப்பிரிக்காவை 2வதாக பந்து வீசி நெதர்லாந்து தோற்கடித்தது போல் இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் எடுப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement