அதிர்ஷ்டத்தால் தப்பிய இந்திய அணி. இல்லனா தோல்வி உறுதி ஆயிருக்கும் – டக்வொர்த் லூயிஸ் ரூல்ஸ் சொல்வது என்ன?

Umran-Malik
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 51 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களையும் குவித்தனர்.

Shubman Gill and SKY

- Advertisement -

பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 104 ரன்கள் எடுத்திருந்த வேளையில் போட்டி மழை காரணமாக தடைப்பட்டது.

பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டி இரு அணிகளுக்குமே வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்ததாக அம்பயர்கள் அறிவித்தனர். இப்படி நியூசிலாந்து அணி இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் இந்திய அணி அதிர்ஷ்டத்தால் இந்த போட்டியின் தோல்வியிலிருந்து தப்பியுள்ளனர்.

Seden-Park-Rain

அதன்படி டக் வொர்த் லூயிஸ் விதிமுறை கூறுவது யாதெனில் : மழை பெய்து போட்டி நிற்கும் வேளையில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி 20 ஓவர்களை பேட்டிங் செய்திருந்தால் மட்டுமே டக் வொர்த் லூயிஸ் விதிமுறை செல்லுபடியாகும். ஆனால் நியூசிலாந்த அணி 18 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்திருந்ததால் அந்த இரண்டு ஓவர்கள் மீதமிருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : வங்கதேச தொடராவது நல்லா நடக்கனும் கடவுளே. 3 ஆவது போட்டிக்கு பிறகு – கேப்டன் தவான் பேசியது என்ன?

இதன் காரணமாக இந்த போட்டியில் டக் வொர்த் லூயிஸ் விதிமுறை செயல்படுத்தப்படவில்லை. ஒருவேளை 20 ஓவர்கள் நியூசிலாந்து கிரிக்கெட் அணி பேட்டிங் செய்திருந்தால் நிச்சயம் டக் வொர்த் விதிமுறைப்படி நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றிருக்கும். இப்படி சரியாக இரண்டு ஓவர்களுக்கு முன்னர் மழை பெய்த அதிர்ஷ்டத்தால் இந்திய அணி இந்த போட்டியின் தோல்வியிலிருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement