வங்கதேச தொடராவது நல்லா நடக்கனும் கடவுளே. 3 ஆவது போட்டிக்கு பிறகு – கேப்டன் தவான் பேசியது என்ன?

Shikhar-Dhawan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு அடுத்து இந்திய அணி அங்கிருந்து நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது ஒருநாள் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தவறவிட்டது.

Shubman Gill and SKY

- Advertisement -

அதன்படி இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய நிலையில் அடுத்ததாக நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளுமே மழை காரணமாக இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி கைவிடப்பட்டது. இப்படி அடுத்தடுத்த போட்டிகள் மழையால் தடைபட்டது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

முடிவில் நியூசிலாந்து அணி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்த மூன்றாவது போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷிகார் தவான் கூறுகையில் : நாங்கள் இந்த சுற்றுப்பயணத்திற்கு அடுத்ததாக பங்களாதேஷ் செல்ல உள்ளோம். அங்கு தற்போது வானிலை நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Seden-Park-Rain

இந்த தொடரில் விளையாடிய இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது மிகச் சிறப்பாக செயல்பட்டது. ஆனாலும் பந்துவீச்சில் இன்னும் ஒரு குழுவாக நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அடுத்த உலக கோப்பை தொடருக்கு குறுகிய இடைவெளியே இருக்கும் வேளையில் ஒரு அணியாக நாங்கள் தயாராக வேண்டியது அவசியம்.

- Advertisement -

அந்த வகையில் பங்களாதேஷ் தொடரின் போது சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்ப இருப்பதால் இந்திய அணி மேலும் பலம் பெறும் என்று நம்புகிறேன். உலகக்கோப்பை அருகில் வரும் இவ்வேளையில் தொடர்ச்சியாக நாங்கள் விளையாடுவது நல்ல பயிற்சியாக இருக்கும்.

இதையும் படிங்க : ஹர்ஷா போக்ளேவின் கேள்விக்கு நிதானத்தை இழந்து பதிலளித்த ரிஷப் பண்ட் – ரசிகர்கள் கண்டிப்பு

அதே வேளையில் இங்கு போட்டி மழையால் நடைபெறாமல் போனது போன்று அங்கும் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்று விரும்புகிறோம். தற்போது உள்ள இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் இன்னும் சில இடங்களில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என ஷிகார் தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement