ஹர்ஷா போக்ளேவின் கேள்விக்கு நிதானத்தை இழந்து பதிலளித்த ரிஷப் பண்ட் – ரசிகர்கள் கண்டிப்பு

Harsha-Bhogle
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று நடைபெற்ற கடைசி ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 47.3ஓவர்களில் 219 ரன்களை குவித்த வேளையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 104 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது மழை பெய்ததன் காரணமாக இன்று போட்டியும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Washington Sundar.jpeg

- Advertisement -

இதன் காரணமாக நியூசிலாந்து அணியானது இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே சஞ்சு சாம்சன் வெளியில் அமர வைக்கப்பட்டு ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக விளையாடி வருவது குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்து வருகின்றன.

ஏனெனில் சமீப காலமாகவே சொதப்பி வரும் ரிஷப் பண்டிற்கு பதிலாக திறமையான சஞ்சு சாம்சன் விளையாட வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கு முன்பாக பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே எடுத்த இன்டர்வியூ ஒன்றில் கலந்து கொண்ட ரிஷப் பண்ட் அவருக்கு எதிராக அளித்த திமிரான பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.

Rishabh Pant

அந்த வகையில் ஹர்ஷா போக்லே ரிஷப் பண்டிடம் : இந்த கேள்வியை நான் முன்பு சேவாக்கிடம் கேட்டிருக்கிறேன். தற்போது உங்களிடம் கேட்கிறேன். உங்களை பார்க்கும் போது ஒயிட் பால் கிரிக்கெட்டில் தான் சிறப்பாக விளையாடுவீர்கள் என்று நினைத்தேன். ஆனால் அதைவிட டெஸ்ட் சாதனைகள் தான் சிறந்ததாக இருக்கிறது என்றார். உடனே அதற்கு பதில் அளித்த ரிஷப் பண்ட் : சார் ரெக்கார்ட்ஸ் எல்லாம் வெறும் நம்பர் தான். என்னுடைய வைட் பால் கிரிக்கெட்டும் அந்த அளவு மோசமானதாக இல்லை என்று கூறினார்.

- Advertisement -

பிறகு மீண்டும் ஹர்ஷா போக்ளே : நான் மோசமானது என்று சொல்லவில்லை. உங்கள் டெஸ்ட் நம்பர்களோடு ஒப்பிடுகிறேன் என்று கூறினார். பின்னர் ரிஷப் பண்ட் : ஒப்பீடு செய்வது என் வாழ்க்கையின் ஒரு பகுதி அல்ல. தற்போது எனக்கு 24-25 வயது தான் ஆகிறது. 30-32 வயதாகும் போது அதை செய்யுங்கள் என்று நிதானத்தை இழந்து பதில் அளித்தார். இப்படி ரிஷப் பண்ட் திமிராக பதில் அளித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் கண்டனத்தை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : ஆமா நாம இப்போ எந்த ஊர்ல இருக்கோம் – நேரலையில் ஊர் பேர் தெரியாமல் சிக்கிய வாசிங்டன் சுந்தர்

மேலும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் நிபுணரான அவரின் வார்த்தைகள் கடினமாக இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு பொறுமையாகவும் நிதானத்துடன் பதில் அளித்திருக்கலாம். ஆனால் ரிஷப் பண்ட் வெளிப்படையாக தனது நிதானத்தை இழந்து திமிராக அவரிடம் பேசியது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு கண்டனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement