ஆமா நாம இப்போ எந்த ஊர்ல இருக்கோம் – நேரலையில் ஊர் பேர் தெரியாமல் சிக்கிய வாசிங்டன் சுந்தர்

Washington Sundar.jpeg
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த பின் நியூசிலாந்துக்கு பயணித்த இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை மழைக்கு மத்தியில் சிறப்பாக செயல்பட்டு 1 – 0 (3) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத நிலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 தொடரில் அசத்திய அதே இளம் அணி ஷிகர் தலைமையில் களமிறங்கிய ஒருநாள் தொடரில் அதே மழைக்கு மத்தியில் சுமாராக செயல்பட்டு 1 – 0 (3) என்ற என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தின் முதல் தொடராக கருதப்பட்ட இத்தொடரில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் சுமாராகவே செயல்பட்ட இந்தியா ஆரம்பத்திலேயே தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இருப்பினும் சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் என இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட சில இளம் வீரர்களுக்கு மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அட்டகாசமாக செயல்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டே ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் காயத்தால் தன்னுடைய 2வது போட்டியை கடந்த பிப்ரவரி மாதம் விளையாடினார். அதன்பின் 2022 ஐபிஎல் தொடரில் மீண்டும் காயத்தை சந்தித்த அவர் ஜிம்பாப்வே தொடரில் தேர்வாகி விளையாட காத்திருந்த நிலையில் மீண்டும் காயத்தை சந்தித்து வெளியேறினார்.

- Advertisement -

எந்த ஊர்ல இருக்கோம்:
இருப்பினும் கடுமையான போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக இந்த தொடரில் ஆல் ரவுண்டராக தேர்வு செய்யப்பட்ட அவர் முதல் போட்டியிலேயே வெறும் 16 பந்துகளில் 37* ரன்களை 231.25 என்ற தெறிக்க விடும் ஸ்ட்ரைக் ரைட்டில் குவித்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் (குறைந்தது 25 ரன்கள்) விளையாடிய இந்திய வீரர் என்ற வரலாற்றைப் படைத்தார். அந்த நிலையில் கடைசி போட்டியிலும் ஷ்ரேயஸ் ஐயர் தவிர்த்து சூரியகுமார் உள்ளிட்ட இதர பேட்ஸ்மேன்கள் திணறிய போது அட்டகாசமாக பேட்டிங் செய்த அவர் தனது முதல் அரை சதத்தை அடித்து 51 ரன்கள் குவித்து இந்தியாவின் மானத்தை ஓரளவு காப்பாற்றி 219 ரன்கள் எடுக்க உதவினார்.

அதனால் அடுத்து வரும் தொடர்களில் அவர் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறுவார் என்று தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அப்படி சிறப்பாக செயல்பட்ட அவரை 3வது போட்டியின் முடிவில் முன்னாள் தமிழக வீரர் முரளி கார்த்திக் பேட்டி எடுத்தார். குறிப்பாக சமீபத்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் லான்ஷைர் அணிக்காக விளையாடிய போது அங்குள்ள நிலவிய குளிரான சூழ்நிலையும் நியூசிலாந்தில் நிலவும் குளிரான சூழ்நிலையும் ஒரே மாதிரி இருக்கிறதா? என்று அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆம் என்று பதிலளித்த சுந்தர் கடுமையான குளிருக்கு மத்தியில் பேட்டி கொடுத்ததால் தற்போது எந்த ஊரில் இருக்கிறோம் என்பதை மறந்து அதை முரளி கார்த்திக்கிடம் கேட்டார்.

- Advertisement -

அந்த வீடியோவில் வாஷிங்டன் சுந்தர் பேசியது பின்வருமாறு. “நிச்சயமாக லான்ஷைர் அணிக்காக மான்செஸ்டர் நகரில் விளையாடிய போது நிறைய குளிரை சந்தித்தேன். இதே போல். ஆம் இதே போல் (ஊரை மறந்து விட்டு ரியாக்சன் கொடுக்கிறார்) ஆமா நாம் இப்போ எங்கே இருக்கிறோம்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்துக் கொண்டே நாம் “கிறிஸ்ட்சர்ச்” நகரில் இருக்கிறோம் என்று முரளி கார்த்திக் அவருக்கு தெளிவுபடுத்தினார். அதைத்தொடர்ந்து இந்த தொடரில் விளையாடியது பற்றி வாஷிங்டன் சுந்தர் மேலும் பேசியது பின்வருமாறு.

“எனக்கு பயிற்சியாளர் சில செய்திகளையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். அதனால் அந்த செய்திகளுக்கு ஏற்றார் செயல்பட வேண்டும் என்பதில் நான் கவனம் செலுத்துகிறேன். மேலும் கடந்த காலங்களில் பேட்டிங்கில் விளையாடிய அனுபவத்தை இந்த தொடரில் நான் எளிமையாக பயன்படுத்தினேன். குறிப்பாக பந்தை மட்டும் பார்த்து என்னுடைய வழியில் விளையாடினேன். எஞ்சிய ரன்கள் அனைத்தும் தாமாகவே வந்தது” என்று கூறினார்.

Advertisement