INDvsNZ : T20 போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு ? எந்த சேனலில் ஒளிபரப்பாகும் ? – முழுவிவரம் இதோ

Rohith
- Advertisement -

இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியதற்கு அடுத்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தற்போது ஜெய்ப்பூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்த இந்திய அணியில் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

மேலும் இந்த தொடரில் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட இருப்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த இந்தியா நியூசிலாந்து டி20 தொடரானது எங்கு ? எப்போது ? எந்த நேரத்தில் நடைபெறும் என்ற தகவலும், எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற தகவலையும் நாங்கள் இங்கு தொகுத்து வழங்கி உள்ளோம்.

அதன்படி 17 ஆம் தேதி முதலாவது டி20 போட்டி ஜெய்ப்பூரிலும், 19 ஆம் தேதி இரண்டாவது டி20 ராஞ்சியிலும், 21 ஆம் தேதி 3ஆவது டி20 போட்டி கொல்கத்தாவிலும் நடைபெற இருக்கின்றன. இந்த மூன்று போட்டிகளிலுமே இந்திய நேரப்படி இரவு ஏழு முப்பது மணிக்கு துவங்கும்.

starsport

மேலும் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகள் அனைத்திலும் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்களுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழிலும் இந்த போட்டி ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டி20 தொடரினை அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெறவுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : 5 கோடி ரூபாய் கை கடிகாரத்தை கொண்டு வந்து வரிஏய்ப்பு செய்தாரா பாண்டியா ? – மும்பை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?

இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா தலைமையிலான இளம் அணி எவ்வாறு செயல்படப்போகிறது என்பதைக்கான அனைவரும் இந்த தொடரினை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement