5 கோடி ரூபாய் கை கடிகாரத்தை கொண்டு வந்து வரிஏய்ப்பு செய்தாரா பாண்டியா ? – மும்பை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?

Pandya-2
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த ஹார்டிக் பாண்டியா அடுத்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடாததால் உலகக் கோப்பை தொடர் முடிந்து நேற்று தான் துபாயிலிருந்து நாடு திரும்பினார். அவ்வாறு நாடு திரும்பும் போது துபாயில் பல விலையுயர்ந்த பொருட்களை அவர் ஷாப்பிங் செய்ததாக தெரிகிறது. மேலும் அவர் நேற்று துபாயில் இருந்து மும்பை விமான நிலையம் திரும்பும்போது விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அவரிடமிருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு கை கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி காட்டுத் தீ போலப் பரவ ஆரம்பித்துள்ளது.

மேலும் பாண்டியா அந்த கை கடிகாரங்களுக்கான வரியையும் கட்டவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் என்ன நடந்தது ? தான் எந்தெந்த பொருட்களை கொண்டு வந்தேன் என்பது குறித்தும் ஹார்டிக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில் :

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை காலை துபாயிலிருந்து நாடு திரும்பியதும் மும்பை ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் தானாக முன் சென்று தான் வாங்கிய அனைத்து பொருட்களையும் காண்பித்து அதற்கான வரியையும் கட்டியுள்ளதாக ரசீதுகளை காண்பித்துள்ளார். அதன்பிறகே அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் 5 கோடி ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரத்தை வாங்கவில்லை என்றும் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கை கடிகாரத்தை வாங்கியுள்ளேன் என்றும் கூறியுள்ளார். அதோடு ஒரு இந்திய குடிமகனாக எனக்கு இந்நாட்டின் விதிமுறைகள் தெரியும், என்றும் தான் முறைப்படி அனைத்து வரிகளையும் கட்டிய பின்பு பொருட்களை எடுத்து வந்ததாகவும் இந்த விடயத்தில் நான் வேறு எந்த வரிஏய்ப்பும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரே இடத்திற்கு 5 வீரர்களா ? டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள தவறு – ரசிகர்கள் விமர்சனம்

அதோடு அனைத்து விவரங்களையும் தெளிவாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் காண்பித்த பிறகு தான் நான் என்னுடைய லக்கேஜுடன் வெளியேறினேன் என்று ஹார்டிக் பண்டியா குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் இது வதந்தி என்றும் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement