ஒரே இடத்திற்கு 5 வீரர்களா ? டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள தவறு – ரசிகர்கள் விமர்சனம்

INDvsNZ

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12-சுற்றோடு வெளியேறிய இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை துறந்துள்ளதால் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் பதவி விலகியதையடுத்து புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இந்த தொடர் முதல் செயல்பட இருக்கிறார்.

dravid

ரோகித் சர்மா தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இந்த டி20 தொடருக்கான அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் போன்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் தேர்வு செய்துள்ள வீரர்கள் திறமையான வீரர்கள் என்றாலும் இந்த தேர்வு முற்றிலும் தவறானது என்று ரசிகர்கள் சில குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி தேர்வுக் குழுவினர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

- Advertisement -

அப்படி ரசிகர்கள் குறிப்பிடும் ஒரு விடயம் யாதெனில் : இந்திய அணியில் ஏற்கனவே கேப்டனாக ரோஹித்தும், துணை கேப்டனாக ராகுலும் செயல்படுவதால் அவர்கள் நிச்சயம் பிளேயிங் லெவன் அணியில் இடம்பிடித்தாக வேண்டும். அப்படி அவர்கள் விளையாடும் பட்சத்தில் அவர்கள் இருவரும் துவக்க வீரர்கள் விளையாடுவார்கள்.

rahul 1

ஆனால் அவர்கள் இருவரை தவிர்த்து ருதுராஜ், வெங்கடேஷ் ஐயர், இஷான் கிஷன் ஆகிய மூன்று துவக்க வீரர்களை இந்த அணியில் தேர்வு செய்துள்ளார்கள். இவர்கள் மூவருமே ஐ.பி.எல் அணிகளுக்கு துவக்க வீரர்களாக விளையாடுபவர்கள். இதனால் வேறு இடத்தில் அவர்களால் சிறப்பாக விளையாட முடியுமா ? என்று தெரியாது. எனவே ஒரே இடத்தில் 5 வீரர்களை இந்த தொடரில் தவறாக தேர்வு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : போதுமான ஆதாரங்கள் இல்லை. சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட – ஹார்டிக் பாண்டியா

மேலும் வீரர்கள் அவரவர்களது இடத்தில் விளையாடினால் தான் சிறப்பான ஆட்டம் வெளிவரும் என்றும் சரியான இடத்திற்கான சரியான வீரர்களை தேர்வு செய்வது அவசியம் என்றும் தேர்வுக்குழுவினர் விமர்சித்து ரசிகர்கள் தங்களது கண்டனங்களை சமூக வலைதளம் மூலமாக முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement