போதுமான ஆதாரங்கள் இல்லை. சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட – ஹார்டிக் பாண்டியா

Pandya
- Advertisement -

கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கிய டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஹர்டிக் பாண்டியா இந்திய அணியுடன் இணைந்து உலககோப்பை டி20 தொடரில் பங்கேற்று வந்தார். அதனை தொடர்ந்து சூப்பர் 12-வது சுற்றின் முடிவில் இந்திய அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இவ்வேளையில் ஹார்டிக் பாண்டியா நேற்று துபாயிலிருந்து நாடு திரும்பினர்.

pandya

- Advertisement -

இந்நிலையில் அவ்வாறு ஹார்டிக் பாண்டியா துபாயிலிருந்து நாடு திரும்பும் போது மும்பை ஏர்போர்ட்டில் ஹார்டிக் பாண்டியா தடுத்து நிறுத்தப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அவர் சுமார் 5 கோடி மதிப்பிலான இரண்டு விலை உயர்ந்த கை கடிகாரங்களை போதிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்கு கொண்டு வந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் அவரது கை கடிகாரங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த கை கடிகாரங்களை வாங்கியதற்கான முறையான ஆவணங்கள் இல்லை என்றும் அதற்கான வரியையும் அவர் செலுத்த வில்லை என்றும் அவர்மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

pandya 1

எப்போதுமே விலையுயர்ந்த பொருட்களின் மீது மோகம் கொண்ட பாண்டியா தான் பயன்படுத்தும் பொருட்களை எல்லாம் ஆடம்பரமாக வாங்கும் பழக்கம் கொண்டவர். ஏற்கனவே அவரிடம் விலையுயர்ந்த பல வாட்ச்கள் இருக்கும் வேலையில் தற்போது மீண்டும் சுமார் 5 கோடியிலான 2 கை கடிகாரங்களை வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஹனுமா விஹாரியை டெஸ்ட் அணியில் சேர்க்காததன் காரணம் இதுதான் – சுனில் கவாஸ்கர் விளக்கம்

உலகக்கோப்பை டி20 தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த அவர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement