ஹனுமா விஹாரியை டெஸ்ட் அணியில் சேர்க்காததன் காரணம் இதுதான் – சுனில் கவாஸ்கர் விளக்கம்

Gavaskar
- Advertisement -

இந்திய அணியானது உலகக் கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12-சுற்றுடன் வெளியேறியது. அதைத்தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் முடிவடைந்தவுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான அணியை அன்மையில் பிசிசிஐ அறிவித்தது. அதில் இந்திய அணியின் டெஸ்ட் வீரரான விகாரி நீக்கப்பட்டிருந்தது அனைவரது மத்தியிலும் பெரிதளவு பேசப்படும் விடயமாக மாறியது.

indvsnz

- Advertisement -

ஏனெனில் இதுவரை இந்திய அணிக்காக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விகாரியை எவ்வாறு நீக்கலாம் ? என்றும் சிட்னி டெஸ்டில் அவர் விளையாடிய ஆட்டத்தை எவ்வாறு மறந்தீர்கள் ? என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் விகாரியின் இந்த நீக்கம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில் :

அவரது நீக்கம் எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் எந்தவித கிரிக்கெட்டையும் விளையாடவில்லை. குறிப்பாக கடந்த மூன்று நான்கு மாதங்களாக அவர் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட விளையாடவில்லை. அதேபோன்று அவர் இந்த நாலு மாதமாக எந்தவித கிரிக்கெட்டிலும் பங்கேற்கவில்லை. இதன் காரணமாகவே அவர் நம் பார்வையிலிருந்து தள்ளி இருந்துள்ளார்.

Vihari

அவர் நான்கு மாதமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததாலே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் விளையாடி நம் கண்ணுக்கு தெரியும் வீரர்களை மட்டுமே தேர்வு குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர். அதனால் விகாரி தேர்வுக்குழுவினரது கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.சி.சி அறிவித்த இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் பெஸ்ட் லெவன் அணி இதுதான் – கேப்டன் யாருன்னு பாருங்க

இந்நிலையில் விகாரி இந்திய ஏ அணியுடன் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் இந்த டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை என்றும் இந்திய முதன்மை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது அவர் நிச்சயம் அணியில் இடம் பிடிப்பார் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement