ஐ.சி.சி அறிவித்த இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் பெஸ்ட் லெவன் அணி இதுதான் – கேப்டன் யாருன்னு பாருங்க

players
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய டி20 உலக கோப்பை தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த உலக கோப்பை தொடரில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி மகுடம் சூடியது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு ஐசிசி தங்களது பெஸ்ட் லெவன் அணியை அறிவித்துள்ளது.

aus 1

- Advertisement -

இப்படி ஐ.சி.சி வரையறுத்துள்ள அந்த அணியில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த நான்கு வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக இந்த தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த எந்த ஒரு வீரரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களில் ஒருவர் கூட இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அப்படி ஐசிசி பட்டியலிட்ட இந்த உலககோப்பையின் பெஸ்ட் டி20 அணியின் வீரர்கள் விவரம் இதோ :

azam-1

1.டேவிட் வார்னர், 2.ஜோஸ் பட்லர்-விக்கெட்கீப்பர், 3.பாபர் ஆசம்-கேப்டன், 4.சரித் அசலங்கா, 5.ஏடன் மார்க்ரம், 6.மொயின் அலி, 7.வணின்டு ஹசரங்கா, 8.ஆடம் ஸாம்பா, 9.ஜோஸ் ஹாசில்வுட், 10.ட்ரெண்ட் பவுல்ட், 11.ஆன்ரிச் நார்ட்ஜே, 12.சஹீன் அப்ரிடி

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த ஆண்டு வார்னர் விளையாடப்போகும் ஐ.பி.எல் அணி அதுதான் – பிராட் ஹாக் கணிப்பு

இப்படி ஐசிசி அறிவித்துள்ள இந்த பெஸ்ட் லெவன் வீரர்களுக்கான பட்டியலில் கேப்டனாக மிகவும் அற்புதமான தேர்வு ஒன்று நடைபெற்றுள்ளது. ஏனெனில் இறுதிப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மற்றும் வெற்றி பெற்ற அணியைச் சேர்ந்த ஆரோன் பின்ச் என யாரையும் தேர்வு செய்யாமல் பாகிஸ்தான் அணியை சிறப்பாக வழி நடத்திய பாபர் அசாமை ஐசிசி கேப்டனாக தேர்வு செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதேபோன்று மற்றொரு பாகிஸ்தான் வீரரான வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி 12-ஆவது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement