விராட் கோலி சதமடிக்கலனா என்ன? லைவ் ஸ்ட்ரீமிங்கில் இந்தியா நியூசிலாந்து போட்டி – படைத்த வரலாற்று சாதனை

Kohli
- Advertisement -

நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் 20 லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளானது தலா நான்கு வெற்றிகளை பெற்று இந்த தொடரில் 8 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்தன. இவ்வேளையில் நேற்று அக்டோபர் 22-ஆம் தேதி தர்மசாலா நகரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.

புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி முதலிடத்திற்கு முன்னேறும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியானது பரபரப்புக்கு சற்றும் குறைவில்லாமல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது நியூசிலாந்து அணி நிர்ணயத்தை 274 ரன்களை 48 ஓவர்களில் கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் சார்பாக விளையாடிய நட்சத்திர வீரரான விராத் கோலி இறுதிவரை களத்தில் இருந்து சதத்துடன் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இறுதி கட்டத்தில் 104 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் ஆட்டம் இழந்த போது இந்திய அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் அந்த கடைசி கட்டத்தில் இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் நிகழாத ஒரு சாதனை நிகழ்ந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே ஹாட்ஸ்டார் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை தான் இதுவரை அதிக ரசிகர்கள் லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்த்த போட்டியாக இருந்தது. அந்த வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது லைவ் ஸ்ட்ரீமிங்கில் 3.5 கோடி பார்வையாளர்கள் நேரலையில் கண்டு களித்தனர். ஆனால் நேற்றைய போட்டியின் போது விராட் கோலி சதத்தை நெருங்கிய வேளையில் இந்திய அணியின் வெற்றியும் அருகில் வந்ததால் அந்த நேரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இதையும் படிங்க : கிங் கோலி ஹிட்மேன் ரோஹித் எஃபெக்ட்.. உ.கோ வரலாற்றில் சேசிங்கில் இந்தியாவ தனித்துவ உலக சாதனை

அந்த நேரத்தில் மட்டும் ஹாட்ஸ்டார் மூலம் 4.3 கோடி பார்வையாளர்கள் இந்த போட்டியை நேரலையின் மூலம் கண்டு களித்துள்ளனர். இறுதியில் விராட் கோலி சதத்தை தவறவிட்டாலும் லைவ் ஸ்ட்ரீமிங்கின் மூலம் அதிக பார்வையாளர்கள் கண்டுகளித்த போட்டியாக இந்த இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி சாதனையை நிகழ்த்தியுள்ளது. விராட் கோலி மட்டும் ஆட்டமிழக்காமல் சதத்தை பூர்த்தி செய்து இருந்தால் நிச்சயம் அந்த கடைசி சில பந்துகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 5 கோடியை கூட தொட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement