IND vs NZ : ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட முதலாவது டி20 போட்டி – காரணம் என்ன?

Pandya-and-Williamson
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு அடுத்து தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணியானது அங்கு நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று வெலிங்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது.

INDvsNZ

- Advertisement -

இவ்வேளையில் இன்றைய முதலாவது டி20 போட்டியானது கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் அடுத்ததாக தற்போது ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த டி20 தொடரில் விளையாட இருந்தது.

அதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருந்த வேளையில் இன்று வெலிங்டன் மைதானத்தில் நடைபெற இருந்த முதலாவது t20 போட்டியானது மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Rain

ஏற்கனவே நேற்று வெளியான வானிலை அறிக்கையின் படி இன்றைய போட்டி நடப்பது சந்தேகம் என்று கூறியிருந்த வேளையில் மதியம் 12 மணிக்கு டாஸ் போட இருந்த வேளையில் மழை காரணமாக டாஸ் தாமதமானது. பின்னர் சில மணி நேரங்கள் கடந்தும் மழை நிற்காத காரணத்தினால் இந்த போட்டி கைவிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் அடுத்த நான்கு ஐந்து மணி நேரத்திற்கு வெலிங்டன் நகரில் 90% வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுவதால் ஓவர்களை குறைத்து போட்டியை நடத்தக்கூட வாய்ப்பு இல்லை என்பதன் காரணமாகவே இந்த போட்டி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலி – சூரியகுமார் ஆகியோரில் யார் சிறந்த டி20 பேட்ஸ்மேன்? சேவாக் உள்ளிட்ட 3 ஜாம்பவான்கள் அளித்த பதில் இதோ

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலககோப்பைக்கு பின்னர் இந்திய அணி விளையாட இருக்கும் முதல் போட்டி இது என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்த வேளையில் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது அனைவருக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளது என்றே கூறலாம்.

Advertisement