IND vs NZ : முதல் ஒன்டே நடைபெறும் ஆக்லாந்து மைதானம் எப்படி? பிட்ச் மற்றும் வெதர் ரிப்போர்ட் இதோ

Auckland Eden Park Stadium Ground
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தோல்விக்கு பின் பக்கத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்ற இந்தியா மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணத்தில் கோப்பையை வென்றது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இந்த சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் அசத்திய இளம் அணி அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் அசத்துவதற்கு தயாராகியுள்ளது. சமீப காலங்களில் முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்பே ஆகிய நாடுகளில் இதே இளம் வீரகளுடன் வெற்றி வாகை சூடிய இந்தியா இத்தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல போராடவுள்ளது.

இருப்பினும் கடைசியாக 2020இல் நடந்த ஒருநாள் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் தோல்வியை பரிசளித்தது போல் சொந்த மண்ணில் எப்போதும் வலுவான அணியாக திகழும் நியூசிலாந்து இத்தொடரிலும் கோப்பையை வென்று டி20 தொடரில் சந்தித்த தோல்விக்காக இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. மேலும் 2023இல் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பையை வெல்லும் லட்சியத்தை இத்தொடரிலிருந்து துவக்கும் இரு அணிகளுமே தங்களுக்கு தேவையான இளம் வீரர்களையும் கண்டறிய உள்ளது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 25ஆம் தேதியன்று இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு ஆக்லாந்து நகரில் இருக்கும் ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

ஈடன் பார்க்:
1. கடந்த 1900ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 1930 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வரும் இம்மைதானத்தில் 1976 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 41,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் வரலாற்றில் 75 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற நியூசிலாந்து 35 வெற்றிகளையும் 35 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 5 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

2. இங்கு 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 4 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் சந்தித்தது 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. கடைசியாக கடந்த 2020இல் இங்கு நடைபெற்ற போட்டியில் இந்தியாவை 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது.

- Advertisement -

3. இம்மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த டாப் 2 இந்திய வீரர்களாக வீரேந்திர சேவாக் (152) மற்றும் சுரேஷ் ரெய்னா (149) உள்ளனர். இந்த மைதானத்தில் அந்த இருவரை தவிர்த்து வேறு எந்த இந்திய வீரரும் சதமடித்ததில்லை. இந்த மைதானத்தில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பவுலராக (12 விக்கெட்கள்) ஜவகல் ஸ்ரீநாத் உள்ளார்.

வெதர் ரிப்போர்ட்:

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நிகழ்ந்த டி20 தொடரின் முதல் போட்டியை மொத்தமாக முடித்த மழை 3வது போட்டியை அபூர்வமாக வந்து டை செய்தது. அதேபோல் 2வது போட்டியிலும் அரை மணி நேரம் தாக்கத்தை ஏற்படுத்திய மழை இப்போட்டியில் கருணை காட்ட உள்ளது.

- Advertisement -

ஏனெனில் இப்போட்டி நடைபெறும் ஆக்லாந்து நகரில் போட்டி நாளன்று 10 – 15% மட்டுமே மழைக்கான வாய்ப்பள்ளதாக நியூசிலாந்து வானிலை மையம் அறிவித்துள்ளதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம். மேலும் வானம் லேசான மேகமூட்டத்துடன் 20+ கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று தெரிய வருகிறது.

பிட்ச் ரிப்போர்ட்:

இப்போட்டி நடைபெறும் ஈடன் பார்க் மைதானம் அளவில் மிகவும் சிறியதாகும். அதனால் பேட்ஸ்மேன்கள் தொட்டாலே பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறக்க உதவி புரியும் இம்மைதானத்தின் பிட்ச் பவுலிங்க்கு சாதகமானது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் வரலாற்றில் இங்கு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 220 ஆகும். மேலும் இப்போட்டி நாளன்று மேகமூட்டத்துடன் நல்ல காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால் புதிய பந்தை ஸ்விங் செய்யும் பவுலர்கள் பவர் பிளேவில் அச்சுறுத்தலை கொடுப்பார்கள்.

- Advertisement -

அது போக நேரம் செல்ல செல்ல ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த மைதானம் கைகொடுக்கும். அதனால் ஆரம்பம் முதலே சற்று கவனத்துடன் விளையாட வேண்டிய பேட்ஸ்மேன்களை நன்கு செட்டிலாகி விட்டால் பின்னர் பெரிய ரன்களை குவிக்கலாம். குறிப்பாக இம்மைதானத்தின் நேர் பவுண்டரியின் அளவு மிகவும் சிறியது என்பதால் ஃபுல் லென்த் பந்துகளை பேட்ஸ்மேன்கள் தெறிக்கவிடும் பவுண்டரிகளாக மாற்றலாம்.

இதையும் படிங்க : IND vs NZ : ஒருநாள் கோப்பையும் இந்தியா வெல்லுமா? வரலாற்று புள்ளிவிவரம், அதிக ரன்கள் – விக்கெட் எடுத்தவர்கள் பட்டியல் இதோ

அந்த வகையில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் நல்ல ஒத்துழைப்பை கொடுக்கும் இம்மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி பகலிரவாக நடைபெறுவதால் டாஸ் வெல்லும் கேப்டன்கள் சேசிங் செய்வது வித்திடலாம்.

Advertisement