IND vs NZ : ஒருநாள் கோப்பையும் இந்தியா வெல்லுமா? வரலாற்று புள்ளிவிவரம், அதிக ரன்கள் – விக்கெட் எடுத்தவர்கள் பட்டியல் இதோ

IND vs NZ Kane Willamson Shikar Dhawan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த பின் பக்கத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்ற இந்தியா 1 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியது. உலக கோப்பையில் சுமாராக செயல்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுத்த அத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான களமிறங்கிய இளம் அணி வெற்றி வாகை சூடி 2024 டி20 உலகக் கோப்பை பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் சீனியர் நட்சத்திரங்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் அணி களமிறங்குகிறது.

IND-vs-NZ

இந்திய மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் லட்சியத்தை கொண்டுள்ள இந்தியா அதற்கேற்ற இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டறிந்து தரமான அணியை உருவாக்கும் பயணத்தை இந்த தொடரிலிருந்து துவங்குகிறது. முன்னதாக சமீப காலங்களில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய மண்ணில் இளம் வீரர்களுடன் கோப்பையை வென்று சாதித்துக் காட்டிய இந்திய அணியில் இப்போதும் சூரியகுமார், சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில், உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் போன்ற தரமான இளம் வீரர்கள் உள்ளனர். அதனால் இம்முறையும் சிகர் தவான் தலைமையில் அசத்தலாக செயல்பட்டு நியூசிலாந்து மண்ணிலும் இந்தியாவின் வெற்றி கொடியை பறக்க இந்திய அணியினர் போராட உள்ளனர்.

- Advertisement -

வரலாற்று புள்ளிவரம்:

மறுபுறம் டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த நியூசிலாந்து டி20 தொடரில் மழையால் சந்தித்த ஏமாற்ற தோல்விக்கு இந்த ஒருநாள் தொடரை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகியுள்ளது. எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகியுள்ள இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 25ஆம் தேதியன்று இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு ஆக்லாந்து நகரில் துவங்குகிறது.

indvsnz

1. ஒருநாள் கிரிக்கெட்டில் இதற்கு முன் நியூசிலாந்தும் இந்தியாவும் 110 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 55 போட்டிகளில் வென்று இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில் நியூசிலாந்து 49 போட்டிகளில் வென்றது. 1 போட்டி டையில் முடிந்தது 5 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

2. குறிப்பாக இத்தொடர் நடைபெறும் நியூஸிலாந்து மண்ணில் 42 ஒருநாள் போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 25 போட்டிகளில் வென்ற நியூசிலாந்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழ்கிறது. இந்தியா 14 போட்டிகளில் வென்றது. 1 போட்டி சமன், 2 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டது. அதே போல் கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் இந்தியாவை சொந்த மண்ணில் நியூசிலாந்து வென்றது.

indvsnz

3. இத்தொடர் நியூசிலாந்து மண்ணில் நடைபெறுவதால் நியூசிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள்:
1. சச்சின் டெண்டுல்கர் : 652
2. வீரேந்திர சேவாக் : 598
3. விராட் கோலி : 514
4. எம்எஸ் தோனி : 505
5. ராகுல் டிராவிட் : 425

- Advertisement -

4. நியூசிலாந்து மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக வீரந்திர சேவாக் 3 சதங்களை நொறுக்கியுள்ளார். அதிக அரை சதங்கள் (5) அடித்த இந்திய பேட்ஸ்மேனாக எம்எஸ் தோனி உள்ளார். இங்கிலாந்து மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய வீரர் பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் : சச்சின் டெண்டுல்கர், 163*, க்றிஸ்ட்சர்ச், 2009

Sachin 1

5. நியூசிலாந்து மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த டாப் 3 இந்திய பவுலர்கள்:
1. ஜவகள் ஸ்ரீநாத் : 38
2. முகமது ஷமி : 21
3. யுஸ்வென்ற சஹால் : 15

4. நியூசிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுத்த ஒரே இந்திய பவுலராகவும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலராகவும் (5/33, வெலிங்டன், 1994) ஜாம்பவான் அனில் கும்ப்ளே உள்ளார்.

5. நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து மண்ணில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் : 392/4, கிரிஸ்ட்சர்ச், 2009. குறைந்தபட்ச ஸ்கோர் : 92 ஆல்-அவுட், ஹமில்டன், 2019

Advertisement