இந்தியாவின் 2வது போட்டி நடக்கும் சிட்னி மைதானம் எப்படி, வரலாற்று புள்ளிவிவரங்கள் – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

Hyderabad Cricket Ground Stadium
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் திரில்லர் திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து அசாத்தியமான வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது. ஏனெனில் 160 ரன்களை துரத்தும் போது ரோஹித், ராகுல், சூரியகுமார் என 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 31/4 என ஆரம்பத்திலேயே திண்டாடிய இந்தியாவை ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி ஆகியோர் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினார்கள்.

குறிப்பாக தனது கேரியரில் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடிய விராட் கோலி 82* (53) ரன்கள் குவித்து இந்தியாவைக் காப்பாற்றினார். அந்த வெற்றி இன்னும் இந்திய ரசிகர்களிடம் புல்லரிப்பை ஏற்படுத்தும் நிலையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியா தன்னுடைய 2வது போட்டியில் அக்டோபர் 27ஆம் தேதியன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. அதில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா 17வது இடத்தில் கத்துக்குட்டியாக தடுமாறும் நெதர்லாந்தை எளிதாக தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதற்கேற்றார் போல் முதல் சுற்றில் போராடி வந்த நெதர்லாந்து சூப்பர் 12 சுற்றில் தன்னுடைய முதல் போட்டியில் மற்றொரு கத்துக்குட்டியான வங்கதேசத்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் அன்றைய நாளில் அசத்தும் அணி வெல்லும் என்பதால் நெதர்லாந்தை குறைத்து மதிப்பிடாமல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களில் ரன்களை எக்ஸ்ட்ராவாக வழங்கிய தவறையும் ஓப்பனிங்கில் 30 ரன்களை கூட எடுக்காத தவறையும் திருத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இப்போட்டியில் இந்தியா வெல்ல முடியும்.

அழகான சிட்னி:
இப்போட்டி ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னியில் இருக்கும் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு துவங்குகிறது. கடந்த 1848ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 1882 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தி வரும் பழமையான இம்மைதானம் பார்ப்பதற்கு அழகாகவும் ஏராளமான வரலாற்று போட்டிகளை நடத்திய பெருமைகளை கொண்டது.

- Advertisement -

1. மொத்தம் 44000+ ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் 2007 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெறுகிறது. இதுவரை இங்கு நடைபெற்ற 12 போட்டிகளில் 5 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும் 5 போட்டிகளில் சேசிங் அணியம் சமமாக வென்றுள்ளன. 2 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இங்கு வரலாற்றில் 3 போட்டிகளில் அதுவும் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா 2 வெற்றிகளையும் 1 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

2. இந்த மைதானத்தில் ஒட்டுமொத்தமாக அதிக டி20 ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக கிங் கோலி ஆட்சி செய்கிறார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 236
2. ஷேன் வாட்சன் : 186
3. கிளன் மேக்ஸ்வெல் : 182

3. இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளர்களாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும் நடராஜன் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். இந்த மைதானத்தில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் ஹர்திக் பாண்டியா : 4/36

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் சிட்னி நகரில் போட்டி நாளன்று உள்ளூர் நேரப்படி மதியம் ஒரு மணி அளவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போட்டி துவங்கும் இரவு 7 மணிக்கு வெறும் 5% மட்டுமே மழைக்கான வாய்ப்புள்ளதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரரிப்போர்ட்:
சிட்னி மைதானம் வரலாற்றில் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. இந்த உலகக் கோப்பையில் கூட சூப்பர் 12 தொடரின் முதல் போட்டியில் இங்கு தான் 200 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்து மண்ணைக் கவ்வ வைத்தது. மேலும் வரலாற்றில் இங்கு நடைபெற்ற சர்வதேச மற்றும் பிக்பேஷ் டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி ஸ்கோர் 173 ஆகும்.

- Advertisement -

எனவே நல்ல வேகம், பவுன்ஸ் இருக்கும் இந்த மைதானத்தில் அதை புரிந்து செயல்படும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிக்கலாம். அதே சமயம் வேகத்தில் விவேகத்தை புகுத்தும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்டுகள் கிடைக்காமல் இருக்காது. மேலும் இம்மைதானத்தில் சுழல் பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் தேவையான விக்கெட்டுகளை எடுப்பார்கள்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவிற்கு அடுத்து இவர்தான் கேப்டன். அதுதான் கரெக்ட்டா இருக்கும் – வக்கார் யூனிஸ் பேட்டி

வரலாற்றில் இங்கு முதல் பேட்டிங் மற்றும் சேசிங் செய்த அணிகள் சமமான வெற்றிகளைப் பெற்றாலும் இப்போட்டி டி20 என்பதுடன் இரவு நேரத்தில் நடைபெறுவதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement