IND vs NEP : நேபாள் போட்டியிலும் குறிக்கிட்ட மழை. மாற்றி அமைக்கப்பட்ட இலக்கு – விதிமுறை கூறுவது என்ன?

IND-vs-NEP-Rain
- Advertisement -

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான குரூப் ஏ பிரிவின் ஐந்தாவது போட்டியானது செப்டம்பர் நான்காம் தேதி கண்டி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார். ஏற்கனவே வெளியான அறிக்கையின்படி போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டது.

அதன் காரணமாகவே ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நேபாள் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடித்து 48.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 230 ரன்கள் குவித்தது.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணியாக பார்க்கப்படும் நேபாள் அணி இந்திய அணிக்கு எதிராக 230 ரன்களை குவித்தது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது. அதோடு அந்த அணியின் சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் ஆசிப் ஷேக் 58 ரன்களையும், சோம்பல் காமி 48 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது 2.1 ஓவரில் 17 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி சில மணி நேரங்கள் தடைபட்டது. அதனால் நிச்சயம் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அதன்படி மழை நின்று தற்போது மீண்டும் ஆட்டம் துவங்கியுள்ளது. அந்த வகையில் போட்டி மழையால் சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டதால் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி தற்போது இந்திய அணிக்கு இலக்கானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 23 ஓவர்களில் இந்திய அணி 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : IND vs NEP : பேட்டிங், பவுலிங்லாம் விடுங்க. இது என்னயா இந்திய அணிக்கு வந்த புது சோதனை – ரசிகர்கள் வருத்தம்

இந்திய அணியை பொறுத்தவரை இந்த இலக்கு மிகச் சிறியது என்பதனால் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் இந்த தொடரில் இருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement