IND vs NEP : பேட்டிங், பவுலிங்லாம் விடுங்க. இது என்னயா இந்திய அணிக்கு வந்த புது சோதனை – ரசிகர்கள் வருத்தம்

IND
- Advertisement -

தோனி தலைமையிலான இந்திய அணியானது கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரினை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதனை தொடர்ந்து இரண்டு முறை 50 உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணியானது இம்முறை 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பையை குறிவைத்து தற்போது தயாராகி வருகிறது.

ஏற்கனவே இந்தி அணியில் ஏகப்பட்ட குறைகள் இருக்கிறது என முன்னாள் வீரர்களும். கிரிக்கெட் விமர்சகர்களும் சுட்டிக்காட்டி வரும் வேளையில் செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணியே பெரும்பாலும் இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால் இந்த ஆசிய கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணியின் வீரர்கள் எதிர்பார்த்ததை விட சற்று சுமாரான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பேட்டிங், பவுலிங் என இரண்டு துறையும் தவிர்த்து இன்று நடைபெற்று வரும் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் படுமோசமாக அமைந்தது.

குறிப்பாக நேபாள் அணியின் வீரர்கள் போட்டியின் முதல் ஐந்து ஓவர்களிலேயே கொடுத்த மூன்று எளிய கேட்சிகளை இந்திய அணியின் வீரர்கள் கோட்டை விட்டனர். இப்படி பீல்டிங்கின் போதும் இந்திய அணியின் வீரர்கள் சற்று மெத்தனம் காட்டுவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்த விடயம் தற்போது இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக மாறவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் உலகின் முன்னணி பத்து அணிகள் பங்கேற்று விளையாடும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பீல்டிங் சிறப்பாக இருந்தால் மட்டுமே எதிரணியை அழுத்தத்திற்குள் கொண்டு வந்து கோப்பையை கைப்பற்ற முடியும். ஆனால் தற்போது முன்பை விட இந்திய அணி வீரர்களின் பீல்டிங் செயல்பாடு மிகவும் சுமாராக இருப்பதினால் இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை அளித்துள்ளது.

கூடவே இதுவரை செட்டிலாகாத அணி ஒரு பக்கம், தெளிவில்லாத பேட்டிங் ஆர்டர் மறுபக்கம், பந்துவீச்சாளர்களிடம் இருந்து முழு திறனும் வெளிவராதது இன்னொரு பக்கம் என ஏற்கனவே பல்வேறு கேள்விகள் இந்திய அணியின் மீது இருந்து வரும் வேளையில் தற்போது ஃபீல்டிங்கிலும் இந்திய அணி சொதப்பி வருவது ஏமாற்றத்தை அளிக்கிறது. கத்துக் குட்டி அணியான நேபாளை கூட இந்திய அணி கடைசி நேரத்தில் 48 ஓவர்கள் வரை சென்று ஆல் அவுட்டாக்கியதும் அனைவரையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement