IND vs NEP : பல போராட்டங்களை கடந்து சாதித்த தமிழக வீரர். அறிமுக போட்டியில் அசத்தல் – சாய் கிஷோரின் பயணம்

Sai Kishore
- Advertisement -

இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான ஏசியன் கேம்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் காலிறுதி போட்டியானது இன்று சீன நாட்டில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 23 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பாக தமிழக வீரர் சாய் கிஷோருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

26 வயதான தமிழக சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் டி.என்.பி.எல் தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். இரண்டு சீசன்களாக சி.எஸ்.கே அணியில் அவர் இடம் பிடித்திருந்தாலும் அவருக்கு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

ஆனால் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் சென்னை அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மூன்று கோடி ரூபாய் என்ற விலையில் எடுக்கப்பட்டார். அதன் பிறகு ஐபிஎல் தொடரில் அதே ஆண்டு லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி இருந்தார். அந்த 2022-ம் சீசனில் மட்டும் ஐந்து போட்டிகளில் விளையாடிய அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

இருப்பினும் தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட், டி.என்.பி.எல் என அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து தொடர்ச்சியாக இந்திய அணியுடன் பயணித்து வந்த அவருக்கு அறிமுகப் போட்டி எதுவும் கிடைக்காமல் இருந்து வந்தது.

- Advertisement -

இவ்வேளையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி தற்போது ஏசியன் கேம்ஸ் தொடருக்காக சீன நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்த இந்திய அணியில் அவருக்கு இன்று அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இன்று இந்திய அணிக்காக முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான அவர் தனது அறிமுகப்பட்டியிலேயே அசத்தலான செயல்பாட்டினை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க : IND vs NEP : நாக் அவுட்டில் மிரட்டிய ஜெய்ஸ்வால், ரிங்கு.. போராடிய நேபாளை சாய்த்த இந்தியா.. செமி ஃபைனலில் மோதுவது யார்?

அந்த வகையில் இன்றைய போட்டியில் 4 ஓவர்கள் முழுவதுமாக வீசிய அவர் 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நேபாள் அணியின் துவக்க வீரரான குஷால் என்பவரை வீழ்த்தி அசத்தினார். கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் வாய்ப்புக்காக போராடி வந்த இவர் ஒருவழியாக தற்போது இந்திய அணிக்காக அறிமுகமாகி முதல் போட்டியிலேயே அற்புதமான செயல்பாட்டினை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement