IND vs NEP : நாக் அவுட்டில் மிரட்டிய ஜெய்ஸ்வால், ரிங்கு.. போராடிய நேபாளை சாய்த்த இந்தியா.. செமி ஃபைனலில் மோதுவது யார்?

- Advertisement -

சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் அக்டோபர் 3ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு ஹங்கொழு நகரில் நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நேபாள் அணிகள் மோதின. அதில் தகுதி சுற்றில் மங்கோலியாவை அடித்து நொறுக்கி உலக சாதனைகளை படைத்த நேபாளை ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருப்பதால் நேரடியாக தகுதி பெற்ற இந்தியா எதிர்கொண்டது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 202/4 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு ஜெயிஸ்வாலுடன் இணைந்து 10 ஓவர் வரை 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த போதிலும் மெதுவாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் 2 (10) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்ததாக வந்த திலக் வர்மா 2, ஜிதேஷ் சர்மா 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

போராட்ட வெற்றி:
ஆனால் மறுபுறம் தொடர்ந்து நேபால் பவுலர்களை சரமாரியாக அடித்து வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் நம்முடைய தரத்தை காட்டி 8 பவுண்டரி 7 சிக்சருடன் அபாரமான சதமடித்து 100 (49) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதை வீணடிக்காமல் கடைசி நேரத்தில் சிவம் துபே 2 பவுண்டரி 1 சிக்சருடன் 25* (19) ரன்கள் ரிங்கு சிங் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 37* (15) ரன்கள் அடித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்த நிலையில் நேபாள் சார்பில் அதிகபட்சமாக திபேந்தர் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 203 ரன்களை துரத்திய நேபாள் அணிக்கு ஆசிப் சேக் 10 (6) ரன்களில் ஆவேஷ் கான் வேகத்தில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிய புர்டேலை தமிழக வீரர் சாய் கிஷோர் அறிமுக போட்டியில் 28 (32) ரன்களில் வீழ்த்தினார். அந்த சூழ்நிலையில் மிடில் ஆர்டரில் கடந்த போட்டியில் அசத்திய கவுசல் மல்லா 29 (22) கேப்டன் ரோகித் பவுடேல் 3 (5) ரன்களில் ரவி பிஷ்னோய் சுழலில் சிக்கினார்கள்.

- Advertisement -

அதனால் என்ன நடைமுறை சந்தித்த அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் திபேந்திர சிங் 32 (15) சுதீப் ஆரி 29 (12) ரன்களை அதிரடியாக விளையாடி ரன் ரேட் எகிறிய அழுத்தத்தில் ஆட்டமிழந்தனர். இறுதியில் கரன் 18* (13) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் நேபாளை 179/9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க: ஏசியன் கேம்ஸ் 2023 : 15 பந்தில் 37 ரன்கள் வெறித்தனத்தை காட்டிய ரிங்கு சிங் – பினிஷர்னா இவர்தான்

இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்களையும் அர்ஷிதீப் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினர். மறுபுறம் நேபாள் இத்தொடரிலிருந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து நாளை நடைபெறும் 4வது காலிறுதிப் போட்டியில் வங்கதேசம் மற்றும் மலேசியா அணிகள் மோதுகின்றன. அதில் வெல்லும் அணியை வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement