IND vs IRE : தொடர்ந்து மழை பெய்தால் என்ன ரிசல்ட்? ரூல்ஸ் கூறுவது என்ன? – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது ஏற்கனவே இந்த தொடரினை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

IND-vs-IRE

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது ஆகஸ்ட் 23-ஆம் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு துவங்க இருந்தது. ஆனால் ஏற்கனவே வெளியான வானிலை அறிக்கை படி இன்றைய போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே மழை பெய்ய துவங்கியதால் போட்டியில் டாஸ் போட தாமதம் ஏற்பட்டது.

அதன்பிறகு தற்போதைய நிலவரப்படி 10 மணி 30 நிமிடங்கள் வரை போட்டி துவங்கவில்லை. மேலும் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒருவேளை தொடர்ந்து மழை பெய்தால் என்ன நடக்கும்? என்பதையும், விதிமுறை என்ன சொல்ல வருகிறது? என்பதையும் இந்த பதிவில் காணலாம்.

Rain 2

அந்த வகையில் இன்னும் போட்டி நடப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதினால் இன்னும் சில நிமிடங்கள் அம்பயர்கள் பொறுமை காத்திருப்பார்கள். ஆனால் நேரம் கடக்க கடக்க குறிப்பிட்ட நிமிடங்களுக்கு ஓவர்கள் குறைக்கப்பட்டு குறைந்த ஓவர்களை வைத்து போட்டி நடைபெறும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : குல்தீப் யாதவுக்கு சேன்ஸ் குடுத்தது ஓகே.. ஆனா இவருக்கு ஏன் சேன்ஸ் தரல – ரசிகர்கள் கோபம்

அதாவது 15, 10 அல்லது 5 என்ற வகையில் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெறும் ஒருவேளை முற்றிலுமாக மழை பெய்து போட்டி நடைபெறுவதற்கு சாத்தியமே இல்லையெனில் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இரண்டு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்திய அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement