IND vs IRE : அயர்லாந்து சவாலில் வெல்லுமா இந்திய படை – டப்லின் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம் பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Dublin Malahide Cricket Ground
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக அயர்லாந்துக்கு சென்றுள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா போன்ற சீனியர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் இத்தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்தியாவை நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து கேப்டனாக வழி நடத்த உள்ளது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

IND-vs-IRE

- Advertisement -

அவரது தலைமையில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற தரமான இளம் வீரர்களைக் கொண்டுள்ள இந்தியா கத்துக்குட்டியாக கருதப்படும் அயர்லாந்தை இத்தொடரில் வீழ்த்தி தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சொந்த மண்ணில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது என்ற நிலைமையில் சொந்த ரசிகர்கள் ஆதரவுடன் கடந்த 2022 ஜூலையில் இந்தியாவை சந்தித்த போது போராடி நழுவ விட்ட வெற்றிகளை இம்முறை பெறுவதற்கு அயர்லாந்து போராடும் என்று உறுதியாக நம்பலாம்.

வில்லேஜ் மைதானம்:
அந்த வகையில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் 3 போட்டிகள் ஆகஸ்ட் 18, 20, 23 ஆகிய தேதிகளில் அயர்லாந்தின் டப்லின் நகரில் இருக்கும் தி வில்லேஜ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் இதுவரை 5 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 5 போட்டிகளிலும் இந்தியா வென்று வலுவான அணியாக செயல்பட்டு வருகிறது.

Dublin Cricket Ground

1. மேலும் இத்தொடர் நடைபெறும் வில்லேஜ் மைதானம் கடந்த 1861இல் தோற்றுவிக்கப்பட்டு 2015 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தி வருகிறது. அதில் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அயர்லாந்து 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. எதிரணிகள் 14 போட்டிகளில் வென்றன. இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை விளையாடியுள்ள 4 டி20 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது.

- Advertisement -

2. இங்கு டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்து (151 ரன்கள்) சதமடித்த ஒரே இந்திய வீரராகவும் அதிகபட்ச ஸ்கோர் (104*) பதிவு செய்த இந்திய வீரராகவும் தீபக் ஹூடா சாதனை படைத்துள்ளார். அதே போல இம்மைதானத்தில் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்லலை எடுத்த இந்திய பவுலர்களாக குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வென்ற சஹால் (தலா 7) முதலிடத்தில் இருக்கின்றனர். இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச டி20 ஸ்கோர் : 225 ரன்களாகும்.

Deepak Hooda 104

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் மலஹைட் நகரில் முதல் போட்டி நடைபெறும் ஆகஸ்ட் 18ஆம் தேதி 100% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. அதனால் முதல் போட்டி முழுமையாக நடைபெறுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடைசி 2 போட்டிகளில் மழைக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் இத்தொடரின் முடிவு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
இத்தொடர் நடைபெறும் வில்லேஜ் மைதானத்தின் பிட்ச் மிகவும் ஃபிளாட்டாக இருக்கும் இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரன் மழை பொழிவார்கள் என்று எதிர்பார்க்கலாம். மேலும் இம்மைதானத்தின் பவுண்டரி அளவுகளும் குறைவாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தி பவுலர்களை அடித்து நொறுக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

chahal deepak hooda IND vs IRE

கடைசியாக இங்கு விளையாடிய இந்தியா முதலில் பேட்டிங் செய்து 225 ரன்கள் குவித்தது. அதை துரத்திய அயர்லாந்து வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டது. அந்தளவுக்கு பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 165 ரன்களாகும். அதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கே நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றினால் மட்டுமே விக்கெட்டுகளை எடுக்க முடியும்.

இதையும் படிங்க:முட்டாளா இருக்க விரும்பல, வெளிநாட்டு டெஸ்டில் அவரால தான் எனக்கு சான்ஸ் கிடைக்கல – அஸ்வின் ஓப்பன்டாக்

அதே சமயம் மேகமூட்டமான சூழ்நிலைகள் நிலவும் பட்சத்தில் ஸ்விங் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதே போல ஸ்பின்னர்களும் மிடில் ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இங்கு வரலாற்றில் நடைபெற்ற 16 டி20 போட்டிகளில் 7 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 9 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement