ஆஷஸ் தொடரையே மிஞ்சிய இந்தியா இங்கிலாந்து தொடர்.. நிகழ்த்தப்பட்ட வரலாற்று சாதனை – விவரம் இதோ

IND-vs-ENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேலையில் இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி பிப்ரவரி 23-ஆம் தேதி துவங்கிய இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 353 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகமட்சமாக அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் 122 ரன்களையும், ராபின்சன் 58 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேரத்தில் 377 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸ்சை முடித்துக் கொண்டது.

அதன் காரணமாக 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணியானது தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது வரலாற்று சாதனை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை ஒரே டெஸ்ட் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்களாக கடந்த ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடரின் போது மொத்தமாக 74 சிக்ஸர்கள் விளாசபட்டது.

இதையும் படிங்க : இப்போ மட்டும் சுகமா இருக்கா பென் ஸ்டோக்ஸ்? அம்பயர்களால் இந்தியாவுக்கு சேர்ந்த 4 சோகம்.. ரசிகர்கள் கோபம்

ஆனால் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 74 சிக்ஸர்களுக்கு மேல் அடிக்கப்பட்டு சென்று கொண்டிருக்கிறது. மேலும் இன்னும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியும் எஞ்சியுள்ளதால் நிச்சயம் இந்த தொடரில் தான் அதிகபட்ச சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட டெஸ்ட் தொடராக வரலாற்றில் இடம் பிடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement