ராஞ்சி டெஸ்ட் : 3 ஆவது மற்றும் 4 ஆவது நாள் ஆட்டத்தில் ஏற்படவுள்ள பாதிப்பு – விவரம் இதோ

IND-vs-ENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளின் முடிவில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது ராஞ்சி நகரில் பிப்ரவரி 23-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 353 ரன்களை குவித்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் ஆட்டம் இழக்காமல் 122 ரன்களையும், ஒல்லி ராபின்சன் 58 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் ஜடேஜா நான்கு விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

அதனை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை குவித்துள்ளது. இதன் காரணமாக 134 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் ஆட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி ராஞ்சியில் நாளை மதியம் அதாவது மூன்றாம் நாள் ஆட்டத்தில் மதியம் 2 மணிக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஒற்றை வார்த்தையை சொல்லி கலாய்த்த ரசிகர்கள்.. கோபத்தில் பாட்டிலால் அடிக்க சென்ற பாபர் அசாம்

அதுமட்டும் இன்றி நான்காம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இந்த போட்டியின் சில மணி நேரங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் எந்த அணிக்கும் வெற்றி தோல்வி இன்றி போட்டி டிராவில் முடிவடையவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement