- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் டெஸ்ட் போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வரும் 2 நாட்டு வீரர்கள்.. என்ன காரணம்? – விவரம் இதோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டசன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது ஜூன் 20-ம் தேதியான இன்று லீட்ஸ் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன் காரணமாக தற்போது இந்திய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

கருப்பு பட்டை அணிந்து விளையாடி வரும் வீரர்கள் :

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணியின் வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து தேசிய கீதம் பாடியிருந்தனர். இப்படி இரண்டு அணி வீரர்களுமே கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாட என்ன காரணம்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்தியாவில் உள்ள அமாதாபாத் நகரில் பயங்கரமான ஒரு விமான விபத்து ஏற்பட்டது. அதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பலரும் பலியாகி இருந்தனர்.

எனவே அந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அந்த துக்க நிகழ்வை குறிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இந்திய அணி சார்பாக இந்த போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அவருக்கு இந்திய அணியின் அனுபவ வீரரான சத்தீஸ்வரர் புஜாரா தனது கைகளால் அறிமுக தொப்பியை வழங்கி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவுக்காக அறிமுகமான சுதர்சன்.. நாயர் 8 வருட கம்பேக்.. அதிரடி மாற்றத்துடன் பிளேயிங் லெவனை அறிவித்த கில்

அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக இது இந்திய அணிக்கு அமைந்துள்ளதால் இந்த போட்டியினை வெற்றியுடன் துவங்க இந்திய அணியின் வீரர்கள் மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -