இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி ஜூன் இருபதாம் தேதி இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரில் தொடங்கியது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு காரணமாக விளையாடவில்லை. அதனால் அவர்களுக்கு பதில் இந்திய பேட்டிங் வரிசையில் நிறைய மாற்றங்கள் நிகழ்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போலவே இந்தப் போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இந்தியாவுக்காக விளையாட உள்ளதாக கேப்டன் சுப்மன் கில் அறிவித்தார்.
அறிமுகமான சுதர்சன்:
உள்ளூர், ஐபிஎல், டிஎன்பிஎல் என கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் அசத்திய தமிழகத்தை சேர்ந்த சுதர்சன் இந்தியாவுக்காக அறிமுகம் ஆகியுள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதே போல 8 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்து சமீபத்தில் இங்கிலாந்தில் இரட்டை சதத்தை அடித்த கருண் நாயர் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அதே சமயம் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் அறிமுகமாகி அசத்திய நித்திஷ் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
மாறாக 2021 இங்கிலாந்து தொடரில் அபாரமாக விளையாடிய சர்துள் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் பயிற்சி போட்டியில் பும்ரா, சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர பவுலர்களை அடித்து நொறுக்கிய அவர் சதத்தை அடித்ததால் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். அதே போல அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகாத நிலையில் பிரசித் கிருஷ்ணா வாய்ப்பு பெற்றுள்ளார். இது பற்றி கேப்டன் கில் பேசியது பின்வருமாறு.
இந்திய அணி:
“நாங்களும் முதலில் பவுலிங் செய்திருப்போம். முதல் சில மணி நேரங்கள் எங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் நேரம் செல்ல செல்ல ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும். சூரியன் வெளியே வந்துள்ளது. எனவே இது எங்களுக்கு பேட்டிங் செய்ய நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்களுடைய தயாராகும் முறைகள் சிறப்பாக இருந்தது. பெக்னம் நகரில் நாங்கள் பயிற்சிப் போட்டியில் விளையாடினோம். எங்களுடைய வீரர்கள் நன்றாக உணர்கிறார்கள்”
இதையும் படிங்க: ஜடேஜாவால் நம்ம டீமுக்கு வீழ்ச்சி தான்.. மீண்டும் வாய் விட்டு மாட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர் – ரசிகர்கள் விமர்சனம்
“சாய் அறிமுகமாக களமிறங்குகிறார். கருண் கம்பெக் கொடுத்துள்ளார். சாய் சுதர்சன் 3வது இடத்தில் பேட்டிங் செய்வார்” என்று கூறினார். இந்திய அணி பின்வருமாறு. யசஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (கீப்பர்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, சர்தூள் தாகூர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்ப்ரித் பும்ரா



