IND vs ENG 5வது டெஸ்ட் : 15 வருட கனவை நிஜமாக்குமா இந்தியா – முன்னோட்டம், வரலாற்று புள்ளிவிவரம் இதோ

IND
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 5-வது போட்டி ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் துவங்குகிறது. கடந்த வருடம் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வெளிநாடுகளில் வெற்றிகளைக் குவித்து வந்த விராட் கோலி தலைமையிலான இந்தியா இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

indvseng

- Advertisement -

ஆனால் லீட்ஸ் நகரில் நடந்த 3-வது போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை பரிசளித்த இங்கிலாந்து தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. அதற்காக அஞ்சாத இந்தியா ஓவலில் நடந்த 4-வது போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் அதைவிட மெகா வெற்றி பெற்று 2 – 1* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று மிரட்டியது. இறுதியில் மான்செஸ்டர் நகரில் நடைபெறுவதாக இருந்த 5-வது போட்டிக்கு முன்பாக கரோனா பரவல் ஏற்பட்டதால் அப்போட்டியை ரத்து செய்த இந்திய அணியினர் நாடு திரும்பி ஐபிஎல் தொடரில் விளையாடினர்.

15 வருட கனவு:
தற்போது நடைபெறப்போகும் அந்த போட்டியில் வெல்லப்போவது யார் என்ற மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15 வருடங்களுக்குப் பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஓங்கி காணப்படுகிறது. கடைசியாக கடந்த 2007ல் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்தியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்றது. அதன்பின் 2011, 2014, 2018 ஆகிய வருடங்களில் இங்கிலாந்தை சந்தித்த எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி தலைமையில் சந்தித்த இந்தியா படுதோல்விகளை சந்தித்தது.

INDvsENG

ஆனால் 2018க்கு பின் வலுவான ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2 முறை தோற்கடித்து டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்த இந்தியா அதே புத்துணர்ச்சியுடன் 2021இல் விராட் கோலி தலைமையில் 4 போட்டிகளின் முடிவில் கிட்டத்தட்ட மீண்டுமொரு சரித்திர வெற்றியை இங்கிலாந்தில் பதிவு செய்ய காத்திருந்த போது துரதிஸ்டவசமாக தொடர் நிறுத்தப்பட்டது. எனவே அந்த வெற்றியை 90% கையில் எட்டிப்பிடித்துள்ள இந்தியா இப்போட்டியில் வென்று 15 வருட கனவை நிஜமாக்க மீண்டுமொருமுறை போராட உள்ளது.

- Advertisement -

முன்னோட்டம்:
இங்கிலாந்து: ஆனால் அந்த வெற்றி இந்தியாவுக்கு அவ்வளவு சுலபமாக இம்முறை கிடைக்கப் போவதில்லை. ஏனெனில் கடந்த முறை ஜோ ரூட் தலைமையில் தடுமாறிய இங்கிலாந்து இம்முறை புதிய பயிற்சியாளர் பிரன்டன் மெக்கலம் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடியான வெற்றிகளைக் குவிக்கும் முரட்டுத்தனமான வலுவான அணியாக மாறியுள்ளது. குறிப்பாக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்த அந்த அணி அவர்களது தலைமையில் தங்களது புதிய பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

England Test Ben Stokes

அந்த அணிக்கு பேட்டிங்கில் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, ஓலி போப் ஆகியோரும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ப்ராட், ஜேக் லீச், ஓவெர்ட்டன் ஆகியோரும் நல்ல பார்மில் பந்துவீச்சில் இந்தியாவுக்கு சவால் கொடுக்க காத்திருக்கிறார்கள். எனவே இப்போட்டியில் வென்று குறைந்தது தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் தலைநிமிர இங்கிலாந்து விளையாட உள்ளது.

- Advertisement -

இந்தியா: மறுபுறம் கடந்த வருடம் இருந்த சூழ்நிலை இந்தியாவுக்கு இம்முறை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. ஏனெனில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை பெறும் வகையில் அற்புதமாக வழிநடத்திய வெற்றிகரமான கேப்டன் விராட் கோலிக்கு பதில் புதிய கேப்டனாக பொறுப்பேற்று இதுவரை இலங்கை போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் மட்டுமே வெற்றியை பதிவு செய்த ரோகித் சர்மா முதல் முறையாக இப்போட்டியின் வாயிலாக வெளிநாட்டு மண்ணில் சவாலான இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவை வழி நடத்த உள்ளார்.

INDvsSL cup

அதைவிட கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் முதலில் இப்போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுபோக கடந்த வருடம் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கேஎல் ராகுல் காயத்தால் விலகியுள்ளது, விராட் கோலி, புஜாரா போன்ற முக்கிய வீரர்களின் சுமாரான பார்ம் போன்றவை இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இப்போட்டியில் வென்று 15 வருட கனவை நனவாக்க இந்திய வீரர்கள் வெற்றிக்காக போராட தயாராகியுள்ளனர்.

- Advertisement -

புள்ளிவிவரம்:
1. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 130 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 49 போட்டிகளில் வென்ற இங்கிலாந்து வலுவான அணியாக காணப்படுகிறது. இந்தியா 31 போட்டிகளில் வென்றுள்ளது, 50 போட்டிகள் டிராவில் முடிந்தன.

இதையும் படிங்க : IND vs ENG 5வது டெஸ்ட் : வெல்லப்போவது யார் – இங்கேயும் அச்சுறுத்தும் மழை, வெளியான எட்ஜ்பஸ்டன் வெதர் ரிப்போர்ட் இதோ

2. போட்டி நடைபெறும் இங்கிலாந்து மண்ணில் 35 வெற்றிகளை குவித்துள்ள இங்கிலாந்து எப்போதுமே வலுவான அணியாக காணப்படுகிறது. மறுபுறம் இங்கிலாந்து மண்ணில் வரலாற்றில் இதுவரை இந்தியா வெறும் 9 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

Advertisement