IND vs ENG 5வது டெஸ்ட் : வெல்லப்போவது யார் – இங்கேயும் அச்சுறுத்தும் மழை, வெளியான எட்ஜ்பஸ்டன் வெதர் ரிப்போர்ட் இதோ

Rain
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 1 டெஸ்ட் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. அதில் முதலாவதாக கடந்த வருடம் நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்டு 5-வது போட்டி ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் துவங்குகிறது. கடந்த வருடம் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்து மிரட்டி வந்த விராட் கோலி தலைமையிலான இந்தியா இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்கேற்ற அந்த டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகளில் அற்புதமாக செயல்பட்டு 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆனால் மான்செஸ்டரில் துவங்குவதாக இருந்த கடைசி போட்டிக்கு முன்பாக திடீரென ஏற்பட்ட கரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட அந்த தொடரை முடிக்கும் வகையில் தற்போது அப்போட்டி மீண்டும் நடைபெறுகிறது. கடந்த முறைக்கும் இம்முறைக்கும் இரு அணிகளிலுமே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் இப்போட்டியில் வெல்லப்போவது யார் எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த முறை ஜோ ரூட் – விராட் கோலி தலைமையில் மோதிய இவ்விரு அணிகளும் இம்முறை பென் ஸ்டோக்ஸ் – ரோஹித் சர்மா ஆகியோரின் தலைமையில் பலப்பரிட்சை நடத்த உள்ளது.

- Advertisement -

வெல்லப்போவது யார்:
ஆனால் இம்முறை இப்போட்டியில் வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையில் திண்டாடிய இங்கிலாந்து இம்முறை புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் – பிரண்டன் மெக்கலம் தலைமையில் வலுவான அணியாக மாறியுள்ளது.

அதிலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை தனது சொந்த மண்ணில் தோற்கடித்த அந்த அணி முரட்டுத்தனமான வெற்றிகளைப் பெற்று 3 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது. அதேபோல இப்போட்டியிலும் விளையாடி இந்த தொடரை சமன் செய்வோம் என்று ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் எச்சரித்துள்ளதால் இந்தியா இருமடங்கு கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது.

- Advertisement -

மறுபுறம் இத்தொடரில் ஏற்கனவே இந்தியா முன்னிலை பெறுவதற்கு காரணமாக இருந்த கேப்டன் விராட் கோலிக்கு பதில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா முதல் முறையாக இந்த போட்டியில்தான் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை வழி நடத்துகிறார். அதைவிட கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் இப்போட்டியில் களமிறங்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதுபோக கேஎல் ராகுல் காயத்தால் விலகியது விராட், கோலி, புஜாரா, ரிஷப் பண்ட் போன்ற முக்கிய வீரர்களின் சுமாரான பார்ம் இந்தியாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. இருப்பினும் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க முழுமூச்சுடன் போராட இந்திய அணியினர் தயாராகியுள்ளனர்.

இங்கேயும் மழை:
அப்படி ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அனல் பறக்கப் போகும் இந்த போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இருக்கும் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்க உள்ளது. இருப்பினும் இப்போட்டியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவிக்கிறது.

- Advertisement -

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியை பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை ரத்து செய்ய வைத்ததால் 2 – 2 என்ற கணக்கில் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. அதன்பின் அயர்லாந்துக்கு எதிராக டப்ளின் நகரில் நடந்த முதல் டி20 போட்டியில் குறுக்கிட்ட மழை தற்போது நேராக இந்தியாவை பின்தொடர்ந்து பர்மிங்காம் நகரை வந்தடைந்துள்ளதை பற்றி பார்ப்போம்.

1. ஜூலை 1-ஆம் தேதியன்று உள்ளூர் நேரப்படி 11 மணிக்கு துவங்கும்போது எட்ஜ்பஸ்டன் நகரில் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதுடன் 55% மழைக்கான வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவிக்கிறது. 57%, 55%, 51%, 47%, 43%, 47%, 51% என மாலை 6 மணி வரை இப்போட்டியின் முதல் நாளில் சராசரியாக 50% க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

2. அதேபோல் 2-வது நாளிலும் 11 மணியளவில் 21% என தொடங்கும் மழைக்கான வாய்ப்பு 16%, 21%, 60%, 40%, 60%, 40%, 34% என மாலை 6 மணி வரை நீடிக்கிறது.

இதையும் படிங்க : IND vs ENG 5வது டெஸ்ட் : இங்கிலாந்தின் கோட்டை – எட்ஜபஸ்டன் மைதானத்தில் இந்தியாவின் செயல்பாடுகள், பிட்ச் ரிப்போர்ட் இதோ

3. எனவே இப்போட்டியின் முதல் 2 நாட்கள் மழையால் பாதிக்கப்படுவதற்கு அதிகமான வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. இருப்பினும் கடைசி 3 நாட்களில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே தென்படுவதால் இடையூறுகளையும் தாண்டி இப்போட்டியில் முடிவு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement