IND vs ENG : ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார் – அதிக ரன்கள், விக்கெட்கள் எடுத்த வீரர்கள் – வரலாற்று புள்ளிவிவரம் இதோ

IND vs ENg Rohit Sharma Jos Buttler
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 1 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் முதலாவதாக கடந்த வருடம் தொடங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5-வது போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காமில் நடைபெற்றது. 2 – 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த நிலையில் நடைபெற்ற கடைசி போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் அனுபவமில்லாத ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் 3 நாட்கள் அட்டகாசமாக செயல்பட்ட இந்திய அணியை கடைசி 2 நாட்கள் மிரட்டிய பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து 378 ரன்களை சேசிங் செய்து வரலாற்று தோல்வியை பரிசளித்து 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

Ben Stokes Jasprit Bumrah ENG vs IND

- Advertisement -

இருப்பினும் அதன்பின் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் புதிய கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையில் ஜேசன் ராய், லிவிங்ஸ்டன் போன்ற காட்டடி வீரர்களைக் கொண்ட இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று பழிதீர்த்தது. இதை தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 12-ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு லண்டனில் துவங்குகிறது.

முன்னோட்டம்:
டி20 தொடரில் ஜோஸ் பட்லர், ஜேசன் ராய் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்க தவறுயதே இங்கிலாந்துக்கு தோல்வியை பரிசளித்தது. அந்த நிலைமையில் ஒருநாள் தொடருக்கு ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ போன்ற சமீபத்திய டெஸ்ட் போட்டியில் மிரட்டிய நட்சத்திர வீரர்கள் திரும்புகின்றனர். எனவே ஜோஸ் பட்லர் தலைமையில் மேலும் பலமடைந்துள்ள இங்கிலாந்து இம்முறை இந்தியாவை ஒரு கை பார்த்து ஒருநாள் தொடரின் கோப்பையை வென்று பதிலடி கொடுக்க தயாராகியுள்ளது.

Team India IND vs ENg

மறுபுறம் ரோகித் சர்மா திரும்பியதுமே மொத்தமாக மாறியுள்ள இந்திய அணிக்கு ஷிகர் தவான், முகமது சமி, நீண்ட நாட்களுக்குப் பின் ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்க வருகின்றனர். மேலும் ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் போன்ற நட்சத்திரங்களுடன் சூரியகுமார் யாதவ் போன்ற தரமான வீரர்களும் இந்திய அணியில் உள்ளதால் டி20 போலவே ஒருநாள் தொடரையும் வெல்ல இந்தியாவும் போராட உள்ளது.

- Advertisement -

வரலாற்று புள்ளிவிவரம்:
1. ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் வரலாற்றில் இதுவரை 103 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 55 போட்டிகளில் வென்ற இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. இங்கிலாந்து 43 போட்டிகளில் வென்றுள்ளது. 2 போட்டிகள் டையில் முடிந்தன. 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.

2. இருப்பினும் போட்டி நடைபெறும் இங்கிலாந்து மண்ணில் இவ்விரு அணிகளும் மோதிய 42 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 16 போட்டிகளில் மட்டுமே வென்றது. 22 போட்டிகளில் இங்கிலாந்து வென்று வலுவாக உள்ளது. 1 போட்டி டையில் முடிந்தது, 3 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

பேட்டிங் புள்ளிவிவரம்:
இத்தொடர் இங்கிலாந்து மண்ணில் நடைபெறுவதால் அங்கு இந்தியா மற்றும் இந்திய வீரர்களின் செயல்பாடுகளைப் பற்றி பார்ப்போம்:
1. இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்றில் அதன் சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 3 பேட்ஸ்மேன்கள்:
1. ராகுல் டிராவிட் : 648 ரன்கள் (20 போட்டிகள்)
2. சச்சின் டெண்டுல்கர் : 639 ரன்கள் (17 போட்டிகள்)
3. எம்எஸ் தோனி : 613 ரன்கள் (21 போட்டிகள்)

Rohith

2. இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா 2 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர், அஜின்க்யா ரகானே, சுரேஷ் ரெய்னா, விராட் கோலி ஆகியோர் தலா 1 சதங்கள் அடித்துள்ளனர்.

- Advertisement -

3. 7 அரை சதங்களுடன் இங்கிலாந்து மண்ணில் அதிக அரை சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேனாக தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முதலிடத்தில் உள்ளார். தலா 5 அரை சதங்களுடன் எம்எஸ் தோனி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் 2-வது இடத்தில் உள்ளனர்.

Rohith

4. இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதன் சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேன்கள்:
1. ரோஹித் சர்மா : 137, நாட்டிங்காம், 2018
2. விராட் கோலி : 107, கார்டிப் 2011

பவுலிங் சாதனைகள்:
இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 3 இந்திய பவுலர்கள்:
1. ரவிச்சந்திரன் அஸ்வின் : 15 விக்கெட்கள்
2. ரவீந்திர ஜடேஜா/ முகமது சமி : தலா 13 விக்கெட்கள்
3. ஜஹீர் கான் : 12 விக்கெட்கள்

ashwin

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு போட்டியில் 5 விக்கெட் ஹால் மற்றும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர்கள்:
1. குல்தீப் யாதவ் : 6/25, நாட்டிங்காம், 2018
2. முகமத் ஷமி : 5/69, பர்மிங்காம், 2019

இதையும் படிங்க : NZ vs IRE : வெறித்தன பேட்டிங், சத்தமே இல்லாமல் அயர்லாந்தை அடித்து நியூஸிலாந்து படைத்த மாஸ் உலகசாதனை

டீம் ஸ்கோர்:
இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் : 329/7, பிரிஸ்டோல், 2007. குறைந்தபட்ச ஸ்கோர் : 96/5, ஓவல், 1996

Advertisement