- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா – இங்கிலாந்து முதல் ஒன்டே நடைபெறும் நாக்பூர் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தை 4 – 1 என்ற கணக்கில் சூரியகுமார் தலைமையில் இந்தியா வீழ்த்தியது. அடுத்து நடைபெறும் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இங்கிலாந்தை சந்திக்கிறது.

அந்தத் தொடரில் விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுடன் விளையாடும் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தயாராக உள்ளது. மறுபுறம் டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்தும் தயாராக உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் இருக்கும் விசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

நாக்பூர் மைதானம்:

45000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 2008 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு வரலாற்றில் நடைபெற்ற 9 ஒருநாள் போட்டிகளில் 7 முறை விளையாடி உள்ள இந்தியா 4 வெற்றி 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது. இந்தியாவும் இங்கிலாந்தும் இந்த மைதானத்தில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

வெதர் ரிப்போர்ட்:

பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூர் நகரைச் சுற்றிய பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலை நிலவும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இந்தப் போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

நாக்பூர் பிட்ச் வரலாற்றில் பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக மிடில் ஆர்டரில் ஸ்பின்னர்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுப்பார்கள். புதிய பந்தை பயன்படுத்தி துல்லியமாக வீசினால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் விக்கெட்டுகள் கிடைக்கும். அதே சமயம் சூழ்நிலைகளை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்களும் பெரிய ரன்கள் குவிக்க முடியும்.

இதையும் படிங்க: மாயங்க் யாதவ் கண்டிப்பா இதை செய்வார்.. ஐ.பி.எல் தொடரிலும் அசத்துவார் – ஜாஹீர் கான் நம்பிக்கை

இந்த மைதானத்தில் வரலாற்றில் நடைபெற்ற 9 ஒருநாள் போட்டிகளில் 3 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 6 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 260, 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 288. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு முதலில் நன்றாக பவுலிங் செய்து பின்னர் சேசிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

- Advertisement -