மாயங்க் யாதவ் கண்டிப்பா இதை செய்வார்.. ஐ.பி.எல் தொடரிலும் அசத்துவார் – ஜாஹீர் கான் நம்பிக்கை

Mayank-and-Zaheer
- Advertisement -

கடந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக அறிமுகமாகிய 22 வயது வேகப்பந்து வீச்சாளராரான மாயங்க் யாதவ் நான்கு போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தாலும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதோடு மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசும் அவர் ரன்களை வழங்காமல் கட்டுக்கோப்புடன் பந்துவீசி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தார்.

நிச்சயம் மாயங்க் யாதவ் கம்பேக் கொடுப்பார் :

ஐபிஎல் தொடரில் அவரது சிறப்பான பந்துவீச்சின் மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்த அவருக்கு கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பும் கிடைத்தது.

- Advertisement -

அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்ற அவர் மூன்று போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இதன் காரணமாக அவர் தொடர்ந்து இந்திய அணியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் காயம் காரணமாக அவர் அணியிலிருந்து விலகும் சுழல் ஏற்பட்டது.

அதேவேளையில் மிகச் சிறப்பான வேகப்பந்து வீச்சாளரான அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது மெகா ஏலத்திற்கு முன்னதாக 11 கோடி என்கிற பெரிய தொகை தக்க வைத்தது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் அவர் மீண்டும் கம்பேக் கொடுத்து விளையாடுவாரா? என்பது குறித்து அந்த அணியின் ஆலோசகரான ஜாகிர் கான் சில முக்கிய தகவல்களை வழங்கியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறியதாவது : தற்போது காயமடைந்துள்ள மாயங்க் யாதவ் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய அகாடமில் தங்கி பயிற்சி செய்து வருகிறார். நிச்சயம் அவர் 100 சதவீத உடற்தகுதியை விட 150 சதவீத உடற்தகுதியுடன் திரும்பி வருவதற்காக பயிற்சி மேற்கொள்வார். இது தொடர்பாக நாங்கள் அவரிடம் பேசி வருகிறோம்.

இதையும் படிங்க : அதை செய்றதுக்கு கோலி, ரோஹித் ரோபோ இல்லை.. இதை சொல்லாம மரியாதை கொடுங்க.. பீட்டர்சன் ஆதரவு

நிச்சயம் அவர் இந்த ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்து மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. அவர் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக நிச்சயம் பயிற்சி செய்தால் மட்டும் போதும் அவரால் மிகச் சிறப்பாக பந்துவீச முடியும் என ஜாகிர் கான் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement