இந்தியா – வங்கதேச போட்டியில் வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன? – விரிவான அலசல்

IND vs BAN WC
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 2011 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை வீழ்த்தி 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்தியா தங்களுடைய 4வது போட்டியில் வங்கதேசத்தை அக்டோபர் 19ஆம் தேதி எதிர்கொள்கிறது.

இவ்விரு அணிகளை பொறுத்த வரை வங்கதேச அணிக்கு பேட்டிங் துறையில் லிட்டன் டாஸ் அதிரடியாக விளையாடும் வீரராக பலம் சேர்க்கிறார். அவருடன் நஜ்முல் சான்டோ, டன்சித் ஹசன், தவ்ஹீத் ஹ்ரிடாய் ஆகிய இளம் வீரர்களுடன் நட்சத்திர அனுபவ வீரர் முஸ்ஸ்பிக்கர் ரஹீம் வெற்றிக்காக போராட தயாராக இருக்கிறார். அதைவிட சுழல் பந்து வீச்சு துறையில் கேப்டன் சாகிப் அல் ஹசன் மெஹதி ஹசன் ஆகியோர் வங்கதேசத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்கள்.

- Advertisement -

வெல்லப்போவது யார்:
குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியாவை 2 – 1 என்ற கணக்கில் வீழ்த்துவதற்கு முக்கிய பங்காற்றிய மெஹதி ஹசன் தற்போது நல்ல ஃபார்மில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதே போல வேகப்பந்து வீச்சு துறையில் தஸ்கின் அகமது, மொத்த முஸ்தஃபிஷர் ரகுமான் ஆகிய தரமான வீரர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

அவர்களுடன் ஹசன் முகமது, தன்சிம் ஹசன் மாற்றும் சோரிபுல் இஸ்லாம் ஆகியோரம் சமீபத்தியாக போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு உலகக்கோப்பைக்கு தேர்வாகியுள்ளனர். மறுபுறம் இந்திய அணியை பொறுத்த வரை கேப்டன் ரோகித் சர்மா, கில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஆகிய பேட்ஸ்மேன்கள் சமீபத்திய போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்.

- Advertisement -

அதே போல ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் எதிரணிகளை தெறிக்க விடும் நிலையில் ஷார்துல் தாக்கூர் கிடைக்கும் வாய்ப்பில் தனது வேலையை செய்கிறார். மேலும் ஸ்பின்னர்களாக குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களை தங்களுடைய தரமான சுழலால் திணறடித்து வருகிறார்கள். அவர்களுக்கு நிகராக பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை பறக்க விடும் அளவுக்கு வேகத்தில் மிரட்டி வருகின்றனர்.

எனவே ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் கடந்த சில நாட்களில் வலுவான அணிகளை தோற்கடித்தது போல இந்தியாவுக்கு இப்போட்டியில் வங்கதேசம் சவாலை கொடுக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் சொந்த மண்ணில் தரமான ஆஸ்திரேலியா, பாகிஸ்தானையே தெறிக்க விட்ட இந்தியா நிச்சயம் வங்கதேசத்தையும் அடித்து நொறுக்கி வெற்றி காண்பதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

வரலாற்று புள்ளிவிவரம்:
1. ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை மோதிய 40 இந்தியா 31 போட்டியில் வென்று வலுவான அணியாக திகழ்கிறது. வங்கதேசம் 8 போட்டியில் வென்ற நிலையில் 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதே போல உலகக்கோப்பை வரலாற்றில் மோதிய 4 போட்டியில் இந்தியா 3 முறை வென்றுள்ளது. 2007இல் மட்டும் வங்கதேசம் வென்றது.

இதையும் படிங்க: 2023 உ.கோ பற்றி இந்தியா மீது ஐசிசியிடம் அதிகாரப்பூர்வமாக 2 புகார் செய்த பாகிஸ்தான்.. முழுமையான விவரம்

2. ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக அதிக ரன்கள் (807), சதங்கள் (4) அடித்த இந்திய வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ள நிலையில் அதிகபட்ச ஸ்கோர் (210) பதிவு செய்தவராக இசான் கிசான் (210) இருக்கிறார். அதே போல அதிக விக்கெட்கள் (16) எடுத்த இந்திய பவுலராக அஜித் அகர்கரும் சிறந்த பவுலங்கை பதிவு செய்த பவுலராக ஸ்டூவர்ட் பின்னியும் (6/4) திகழ்கின்றனர். வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் 409 ரன்களாகும்.

Advertisement