IND vs BAN :வங்கதேச தொடருக்கான போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? – எந்த சேனலில் பாக்கலாம்

IND-vs-BAN
- Advertisement -

சமீபத்தில் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது ஹார்டிக் பாண்டியா தலைமையில் அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து ஷிகார் தவான் தலைமையிலான ஒருநாள் அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் ஒருநாள் தொடரை தவறவிட்டது. இந்த தொடரின் பெரும்பாலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டதால் இந்த தொடரானது பெரிய அளவில் சுவாரசியமாக அமையாமல் போனது.

IND-vs-BAN

- Advertisement -

இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு அடுத்து இந்திய அணி அடுத்ததாக வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணியை ஏற்கனவே பிசிசிஐ தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர்.

அதன்படி இந்த 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களும் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை பெற்றுள்ளது.

starsport

இந்நிலையில் இந்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எந்தெந்த தேதிகளில் நடைபெறும்? இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? எந்த சேனலில் பார்க்கலாம்? என்பது குறித்த தகவலை தான் நாங்கள் இந்த தொகுப்பில் உங்களுக்காக பிரத்யேகமாக வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அதன்படி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி டிசம்பர் (4) நான்காம் தேதி டாக்கா நகரில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டியானது டிசம்பர் 7-ஆம் தேதி அதே டாக்கா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியானது சட்டகிராம் நகரில் டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க : IND vs BAN : வங்கதேச தொடருக்கான அணியில் ஜடேஜாவுடன் சேர்ந்து மற்றொரு வீரர் விலகல் – முழு டீம் லிஸ்ட் இதோ

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முழுவதுமே இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு துவங்குகிறது. இந்த ஒருநாள் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் கண்டு களிக்கலாம். அதோடு ஆன்லைனில் இந்த போட்டிகளை காண விரும்புவோர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக இந்த தொடரை கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement