IND vs BAN : வங்கதேச தொடருக்கான அணியில் ஜடேஜாவுடன் சேர்ந்து மற்றொரு வீரர் விலகல் – முழு டீம் லிஸ்ட் இதோ

IND-vs-BAN
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்திய அணி அங்கிருந்து நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. அதன்படி இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை (1-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது, ஒருநாள் தொடரை (1-0) என்ற கணக்கில் தவறவிட்டது.

IND-vs-NZ

- Advertisement -

இதற்கு அடுத்ததாக தற்போது இந்திய அணியானது வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது டிசம்பர் நான்காம் தேதி முதல் டிசம்பர் 26-ஆம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஒருநாள் அணியில் இருந்து ஏற்கனவே ரவிந்திர ஜடேஜா காயம் குணமடைய இன்னும் நாட்கள் ஆகும் என்று கூறி அணியில் இருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து தற்போது மேலும் ஒரு வீரராக இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் அணியில் இருந்து விலகி உள்ளார்.

Yash Dayal

எனவே ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக ஆல்ரவுண்டர் சபாஷ் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதோடு யாஷ் தயாளுக்கு பதிலாக குல்தீப் சென் ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் முகமது ஷமி ஆகியோர் இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் மீண்டும் திரும்பி உள்ளனர்.

- Advertisement -

அதே வேளையில் சூரியகுமார் யாதவ், ஹார்டிக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ இந்த வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 17 வீரர்களைக் கொண்ட ஒருநாள் அணியை தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அப்படி ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் முழு பட்டியல் இதோ :

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 ஏலம் : ஒருவேளை பங்கேற்றால் அதிக கோடிகளுக்கு விலைபோகக்கூடிய டாப் 5 பாகிஸ்தான் வீரர்கள் – வித்தியாச பட்டியல்

1) ரோஹித் சர்மா (கேப்டன்), 2) கே.எல் ராகுல் (து.கேப்டன்), 3) ஷிகார் தவான், 4)விராட் கோலி, 5) ராஜத் படிதார், 6) ஷ்ரேயாஸ் ஐயர், 7) ராகுல் திரிபாதி, 8) ரிஷப் பண்ட், 9) இஷான் கிஷன், 10) சபாஷ் அகமது, 11) அக்சர் படேல், 12) வாஷிங்க்டன் சுந்தர், 13) ஷர்துல் தாகூர், 14) முகமது ஷமி, 15) முகமது சிராஜ், 16) தீபக் சாஹர், 17) குல்தீப் சென்.

Advertisement