INDvsBAN : மழையால் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்? இந்திய அணி அரையிறுதி செல்லுமா? – விவரம் இதோ

Rain
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் சூப்பர் 12 சுற்றும் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது.

IND-vs-BAN

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்திலும், நெதர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்திலும் வெற்றிபெற்ற இந்திய அணியானது மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக தோல்வியை சந்தித்துள்ளதால் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

அதன்படி சூப்பர் 12 சுற்றின் முக்கியமான போட்டியில் இன்று பிற்பகல் 1:30 மணிக்கு அடிலெயிடு மைதானத்தில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது ரொம்பவே முக்கியம் என்கிற நிலையில் இந்த இந்தியா பங்களாதேஷ் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

rain

அடிலெயிடு கிரிக்கெட் மைதானத்தில் இன்று 60% மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் போட்டி நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும் என்பதை நாம் இந்த பதிவில் தெளிவாக காணலாம்.

- Advertisement -

ஒருவேளை இந்த போட்டி மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில் இரண்டு அணிகளுக்குமே ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் என இரண்டு அணிகளும் தலா 5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் சமநிலை அடையும்.

இதையும் படிங்க : அஷ்வினால மட்டும் தான் தப்பு நடந்துச்சு. இல்லனா இந்தியா செமி பைனல் போயிருக்கும் – கவாஸ்கர் சாடல்

ஆனாலும் தற்போது வரை இந்திய அணியின் ரன்ரேட் நல்ல நிலைமையில் உள்ளதால் அது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அடுத்த போட்டியில் ஜிம்பாவே அணியை நாம் வீழ்த்தினாலே அரையிறுதி வாய்ப்பு செல்ல அதிக வாய்ப்பு இருக்கும் என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது.

Advertisement