அஷ்வினால மட்டும் தான் தப்பு நடந்துச்சு. இல்லனா இந்தியா செமி பைனல் போயிருக்கும் – கவாஸ்கர் சாடல்

Gavaskar-and-Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் திரில் வெற்றியும், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்ற இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தால் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி ஆகியிருக்கும் என்கிற நிலையிருந்தது.

David Miller Hardik Pandya IND vs SA

- Advertisement -

ஆனால் முக்கியமான அந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் என்கிற வேளையில் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. அதோடு அந்த தோல்விக்கான காரணம் மோசமான பீல்டிங் தான் என்று பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை கூறிவந்தனர். ரசிகர்கள் மத்தியிலும் இந்திய அணியின் பீல்டிங் செயல்பாடு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.

Ashwin

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான அந்த போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு பீல்டிங் குறைபாடு காரணம் இல்லை என்றும் அஷ்வின் வீசிய அந்த நான்கு ஓவர்கள் தான் என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

போட்டியின் போது கேட்ச்களை விடுவதோ அல்லது ரன் அவுட் வாய்ப்புகளை தவறவிடுவதோ இயல்பான ஒன்றுதான். அதற்கு எந்த ஒரு வீரரின் மீதும் பழி போட முடியாது. ஏனெனில் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் போட்டியில் இதுபோன்ற தவறுகள் நடப்பது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் அந்த போட்டியின் போது இந்திய அணி தோற்றதற்கு முக்கிய காரணம் யாதெனில் அஷ்வின் வழங்கிய அந்த 43 ரன்கள் தான் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கம்பீர் சொல்ற மாதிரி பாபர் அசாம் செல்பிஷ் கேப்டன் தான் – முன்னாள் பாக் ஜாம்பவான் ஆதரவு கருத்து

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அஷ்வின் போன்ற ஒரு பவுலர் குறைவான இலக்கை சுருட்ட நினைக்கும் போது 43 ரன்கள் விட்டுக் கொடுப்பது தவறான ஒன்று. அதிலும் குறிப்பாக 18 வது ஓவரின் போது அவர் 13 ரன்கள் விட்டுக் கொடுத்தது இந்திய அணியின் நிலையை மோசமாக மாற்றி விட்டது என சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement