IND vs BAN : இந்திய அணியின் வெற்றியை தடுக்க குறுக்கு வழியை கையாளப்போகும் பங்களாதேஷ் – விவரம் இதோ

IND-vs-BAN
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் இழந்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை டிசம்பர் 14-ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

IND-vs-BAN

- Advertisement -

அதன்படி நாளை சட்டகிராமில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல், பங்களாதேஷ் அணியின் கேப்டனாக ஷாகிப் அல் ஹசனும் விளையாட உள்ளனர். இந்த டெஸ்ட் போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இவ்வேளையில் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றியை சீர்குலைக்க வங்கதேச அணி அவர்களது பிட்சில் சில விடயங்களை மாற்றியுள்ளதாக சில தகவல்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணியால் இந்திய அணியை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது என்கிற காரணத்தினாலும், இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாலும் இந்தியாவின் வெற்றியை அவர்கள் தடுத்து நிறுத்த நினைக்கின்றனர்.

IND vs BAN Pitch

அந்த வகையில் இந்திய அணியின் வீரர்களால் 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாத படி முற்றிலும் பேட்டிங்க்கு சாதகமான கிரிக்கெட் பிட்சை அவர்கள் அமைத்துள்ளதாக தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

ஏற்கனவே பாகிஸ்தானில் ராவல்பிண்டி மைதானம் முழுக்க முழுக்க பேட்டிங் சாதகமாக இருந்து வருவதால் அங்கு ரன்கள் ஒருநாள் கிரிக்கெட்டை போன்று வருவதாகவும், பல போட்டிகள் முடிவின்றி போவதாகவும் விமர்சனங்கள் இருந்த வேளையில் அதேபோன்று ஒரு மைதானத்தை சட்டகிராம் நகரில் வங்கதேச அணி தயாரித்துள்ளது. இப்படி ஒரு பிட்சை தயாரித்து மறைமுகமாக இந்திய அணியின் வெற்றியை தடுக்க அவர்களின் குறுக்கு வழி இது என்பது அம்பலமாகியுள்ளது.

இதையும் படிங்க : IND vs BAN : அவ்ளோ போராட்டமும் வேஸ்ட் தான், அவருக்கு ப்ளேயிங் லெவன்ல கூட சான்ஸ் கிடைக்காது – உண்மையை விளக்கும் டிகே

ஆனாலும் இந்த மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் நிச்சயம் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றார் போன்று விளையாடாமல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வங்கதேச அணி வீரர்களை வீழ்த்தி வெற்றி பெறுவார்கள் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement