IND vs BAN : அவ்ளோ போராட்டமும் வேஸ்ட் தான், அவருக்கு ப்ளேயிங் லெவன்ல கூட சான்ஸ் கிடைக்காது – உண்மையை விளக்கும் டிகே

Dinesh-Karthik-1
- Advertisement -

2023ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் வரலாற்றின் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஃபைனலுக்கு செல்ல டிசம்பர் 14ஆம் தேதி துவங்கும் வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்குகிறது. இதற்கு முன்பாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) கணக்கில் இழந்த இந்தியா இந்த டெஸ்ட் தொடரை வென்று வங்கதேசத்துக்கு பதிலடி கொடுக்க போராடவுள்ளது. முன்னதாக இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறிய நிலையில் முகமது ஷமிக்கு பதிலாக 12 வருடங்கள் கழித்து யாருமே எதிர்பாராத வகையில் ஜெயதேவ் உனட்கட் தேர்வாகியுள்ளார்.

jayadev Unadkat

- Advertisement -

கடந்த 2010ஆம் ஆண்டே தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 19 வயதில் அறிமுகமான அவர் சுமாராக செயல்பட்டதால் அடுத்த போட்டியிலேயே பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்ட அவர் 2013 – 2018 வரையிலான காலகட்டத்தில் ஐபிஎல் தொடரிலும் இந்தியாவுக்காக விளையாடிய கணிசமான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் சுமாராக செயல்பட்டதால் மொத்தமாக கழற்றி விடப்பட்டார். அதனால் அவருடைய இந்திய கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் அவர் தொடர்ந்து மனம் தளராமல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வந்தார்.

வாய்ப்பில்லை ராஜா:

குறிப்பாக 2019 ரஞ்சிக் கோப்பையில் அபாரமாக செயல்பட்டு கேப்டனாக தன்னுடைய சவுராஷ்டிரா அணிக்கு முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த அவர் அதிக விக்கெட்களை எடுத்த வேகப்பந்து வீச்சாளராகவும் சாதனை படைத்தார். அத்துடன் கடந்த வாரம் நடைபெற்ற முடிந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் அசத்திய அவர் சௌராஷ்டிரா அணிக்கு கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்தார். அதன் காரணமாக 12 வருடங்கள் கழித்து 31 வயதில் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு தாமாக தேடி வந்துள்ளது.

unadkat

இருப்பினும் சிராஜ் போன்ற பவுலர்கள் சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்டு காத்திருப்பதால் அவருக்கு இந்த வங்கதேச தொடரில் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இருப்பினும் இந்த தொடர் அவருக்கு கடைசியாக இருக்காது என்று நம்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்த தொடரில் உனட்கட் விளையாட மாட்டார் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஏற்கனவே உமேஷ் யாதவ், முகமது சிராஜ், சார்துல் தாகூர் ஆகியோர் உள்ளனர். இருப்பினும் இந்த தொடருடன் அவர் மீண்டும் ஒதுக்கப்படாமல் இருப்பதற்கு நல்ல வாய்ப்புள்ளது. சமீப காலங்களில் அவர் கடினமாக உழைத்ததற்கு தற்போது பரிசு கிடைத்துள்ளது”

Dinesh-Karthik-1

“அவர் பல வருடங்கள் கழித்து வெள்ளை ஜெர்சியை அணிந்து இந்திய அணியுடன் இருப்பது பெரிய பரிசாகும். இருப்பினும் அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமாகும். ஏனெனில் அதில் ஜஸ்ப்ரீத் பும்ரா அல்லது ஷமி வருவார்கள் என்பதால் நாம் அவரிடமிருந்து நகர்ந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். இருப்பினும் 12 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த அவருடைய கதை நம் அனைவரது மனதையும் தொடுகிறது. குறிப்பாக கடந்த சில வருடங்களில் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அவர் இந்த வாய்ப்புக்கு தகுதியானவர்”

இதையும் படிங்க: எங்களாலயும் வாழ முடியும், இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்க – ரமீஸ் ராஜா புதிதாக சொல்வது என்ன

“அவர் தன்னுடைய மாநில அணிக்காக விளையாடிய போது ராஜ்கோட் மைதான பிட்ச் எப்படி இருக்கும் என்பதை நன்கு உணர்ந்து அதற்கேற்றார் போல் பந்து வீசி நிறைய விக்கெட்டுகளை எடுத்து அணியையும் வெற்றிகரமாக வழி நடத்தினார்” என்று கூறினார். கார்த்திக் கூறுவது போல அடுத்ததாக வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இதை விட முக்கியமான தொடர் நடைபெறுவதால் அதில் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் திரும்பும் போது அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement