எங்களாலயும் வாழ முடியும், இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்க – ரமீஸ் ராஜா புதிதாக சொல்வது என்ன

Ramiz Raja IND vs Pak
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து ஆசிய மற்றும் உலகக் கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் 3 போட்டிகளில் மோதிய இவ்விரு அணிகளும் அடுத்ததாக வரும் 2023ஆம் ஆண்டு மோதுமா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 2023 ஆசிய கோப்பை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் வாங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா அந்நாட்டுக்கு பயணித்து அத்தொடரில் பங்கேற்காது என்று பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா கடந்த மாதம் அறிவித்தார்.

IND vs PAK Babar Azam Rohit Sharma

ஆனால் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் அவர் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் இப்படி பேசியது ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் எங்களது நாட்டில் நடைபெறும் ஆசியக் கோப்பைக்கு வராமல் போனால் அதே 2023ஆம் ஆண்டு உங்களது நாட்டில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அறிவித்தது. அதை சமீபத்தில் உறுதிப்படுத்திய அந்நாட்டு வாரிய தலைவர் ரமீஷ் ராஜா கடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவை தோற்கடித்து இந்த வருடம் ஃபைனல் வரை சென்று அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் பாகிஸ்தான் அணி பங்கேற்காத 2023 உலக கோப்பையை யார் பார்ப்பார்கள்? என்று விமர்சித்தார்.

- Advertisement -

ரசிகர்கள் ஏராளம்:

அதற்கு இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளைப் போல் அல்லாமல் ஆசிய கவுன்சிலுக்கு நிதி கொடுக்கும் நாடாக இந்தியா இருப்பதால் பிசிசிஐ எடுக்கும் முடிவை உங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை ஃபைனலை விட ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்தியா பங்கேற்ற போட்டிக்கு அதிக ஆதரவு கிடைத்ததையும் சுட்டிக்காட்டிய இந்திய ரசிகர்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுத்தார்கள். இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக இந்தியாவுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடாமலேயே தங்களது வாரியம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக ரமீஷ் ராஜா கூறியுள்ளார்.

Ramiz Raja Sourav Ganguly

அதை விட பாகிஸ்தான் கிரிக்கெட் என்பது ஒரு பிராண்ட்டாக உருவாகியுள்ளதாக தெரிவிக்கும் அவர் இந்தியாவில் இந்திய அணிக்கு அடுத்தபடியாக தங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளதாகவும் புதிதாக பேசியுள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் அங்கு செல்ல விரும்பவில்லை ஆனால் ரசிகர்கள் தான் நாங்கள் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதை விரும்புகிறார்கள். இந்தியா – பாகிஸ்தான் தொடர்பான இந்தியாவின் கதைகளால் எங்களது ரசிகர்கள் முற்றிலும் கசப்பாகியுள்ளார்கள். மேலும் அவர்கள் எங்கள் நாட்டுக்கு வருவதற்கு இடையூறாக அரசாங்கத்தின் கொள்கைகள் இருப்பதால் அவர்கள் வருவார்களா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியாது”

- Advertisement -

“இருப்பினும் ஆசிய கோப்பை போன்ற பலதரப்பு அணிகள் பங்கேற்கும் தொடர் எங்களது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். அதனால் பிசிசிஐ முடிவை நாங்கள் எதிர்ப்போம். மேலும் நான் எப்போதுமே இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகளை விரும்புகிறேன். அத்துடன் இந்தியாவில் இருக்கும் ரசிகர்களை நான் மிகவும் விரும்புகிறேன். அவர்களும் எங்களை விரும்புகிறார்கள். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஒரு பிராண்டாக உருவாகியுள்ளது. எங்களது வீரர்களுக்கு இந்தியாவில் நிறைய ரசிக பட்டாளங்கள் உள்ளனர்”

Ramiz Raja

“மேலும் இந்தியாவில் இந்திய அணிக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை தான் அதிக ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். எனவே அவர்கள் எங்கள் வளர்ச்சியில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் நாங்கள் இந்தியாவுக்கு சென்று விளையாட விரும்புகிறோம். ஆனால் அது சமநிலையுடன் இருக்க வேண்டும். அதற்காக ஒரு குறிப்பிட்ட கிரிக்கெட் வாரியத்திற்கு அடிபணிய முடியாது. நாங்கள் இப்போது பல ஆண்டுகளாக இந்தியாவின் ஆதரவு இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். பாகிஸ்தான் உள்நாட்டில் நிலவும் பொருளாதாரத்தின் அளவை வைத்து எப்படியோ மிகச்சிறப்பாக உயிர் பிழைத்துள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க: யார் வேணாலும் இஷான் கிசான் மாதிரி 200, 300 ரன்கள் அடிக்கலாம் – ஆனா அவரை மாதிரி சதமடிக்க முடியாது – அஜய் ஜடேஜா பாராட்டு

அதாவது இந்திய ரசிகர்களையும் இந்தியாவையும் விரும்புவதாக தெரிவிக்கும் ரமீஸ் ராஜா அங்குள்ள ரசிகர்களும் தங்களை விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இங்கு வந்து விளையாட்டினால் தானே சமநிலை தன்மையுடன் தாங்களும் அங்கு சென்று விளையாட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement