யார் வேணாலும் இஷான் கிசான் மாதிரி 200, 300 ரன்கள் அடிக்கலாம் – ஆனா அவரை மாதிரி சதமடிக்க முடியாது – அஜய் ஜடேஜா பாராட்டு

Ajay
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்து தலை குனிந்த இந்தியா கடைசி போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று தக்க பதிலடி கொடுத்து வைட்வாஷ் தோல்வியை தவிர்த்தது. அதை தொடர்ந்து நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வென்று உண்மையான பதிலடி கொடுக்க தயாராகியுள்ள இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கு தகுதி பெறும் போராட்டத்தையும் துவங்குகிறது.

Ishan Kishan 1

- Advertisement -

முன்னதாக சட்டக்கிரோம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சம்பிரதாய கடைசி ஒருநாள் போட்டியில் காயமடைந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதில் கிடைத்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய இளம் வீரர் இசான் கிசான் இரட்டை சதமடித்து 210 (131) ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். குறிப்பாக மிகவும் இளம் வயதில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் போன்ற உலக சாதனைகளை படைத்த அவர் உலக அளவில் பாராட்டுகளையும் அள்ளினார்.

அதன் காரணமாக அவருடன் 290 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 113 (91) ரன்கள் விளாசி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது பேட்ஸ்மேன் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்த விராட் கோலி பெரிய அளவில் பாராட்டுகளை பெறவில்லை. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் ரன் மெசினாக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குமாறு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

Virat Kohli

72 சதங்கள் எப்பா:

இருப்பினும் அதற்காக மனம் தளராமல் சமீபத்திய ஆசிய கோப்பையில் 1021 நாட்கள் கழித்து சதமடித்து விமர்சனங்களை அடித்து நொறுக்கிய அவர் டி20 உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்டு தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் 1214 நாட்கள் கழித்து 44வது சதத்தை அடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இதனால் சச்சினின் 100 சதங்கள் சாதனையை அவர் உடைப்பாரா என்று எதிர்பார்ப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இசான் கிசான் போன்றவர்கள் அவர்களுடைய நாளில் 300 ரன்கள் கூட அடிக்கலாம் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா விராட் கோலி போல தொடர்ச்சியாக சதங்களை அடிப்பது மிகவும் கடினம் என்று பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவரை விட கடவுள் (சச்சின்) மட்டுமே மேலே உள்ளார். இதை ஒரு நாளில் சாதித்து விட முடியாது. குறிப்பாக இஷான் கிசான் செய்ததை நீங்கள் ஒருநாளில் செய்யலாம் அல்லது ஒருநாளில் முச்சதம் கூட அடிக்கலாம். ஆனால் 72 சதங்களை அடிப்பது அபாரமானது. அந்த வகையில் அவரது பெயரில் கண்சிஸ்டெண்சி உள்ளது” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு முன்னாள் வீரர் அஜித் அகார்கர் இஷான் கிசான் அதிரடியாக விளையாடியது விராட் கோலி எளிதாக சதமடிக்க உதவியதாக தெரிவித்தார்.

Ajay-Jadeja-and-Virat-Kohli

இது பற்றி அவர் பாராட்டி பேசியது பின்வருமாறு. “இஷான் கிசான் இன்னிங்ஸ் விராட் கோலிக்கு மிகவும் உதவியதாக நினைக்கிறேன். ஏனெனில் அவர் லிட்டன் தாஸ் கைகளுக்கே கேட்ச் கொடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அது போன்றவற்றை அரிதாகத்தான் தவற விடுவார்கள். அதே சமயம் அவர் முதல் போட்டியில் அபாரமான கேட்ச் பிடித்ததையும் நீங்கள் மறக்கக்கூடாது. அதை பயன்படுத்தி ஆரம்பத்தில் சில நேரங்களை எடுத்துக் கொண்ட விராட் கோலி நேரம் செல்ல செல்ல பிட்ச்சை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார். கடைசியில் தான் அவர் அதிரடியாக விளையாடினார். என்னைப் பொறுத்த வரை இசான் கிசான் இன்னிங்ஸ் தான் விராட் கோலியின் அழுத்தத்தை நீக்கியது” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs BAN : முதல் டெஸ்ட் நடைபெறும் சிட்டகாங் மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

முன்னதாக ஆசியக் கோப்பையில் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்த விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் சதமடித்துள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வருகிறார். அதற்கும் இந்த வங்கதேச டெஸ்ட் தொடரில் அவர் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement