IND vs BAN : முதல் டெஸ்ட் நடைபெறும் சிட்டகாங் மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

IND vs BAN Pitch
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா முதலில் பங்கேற்ற 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டாலும் கடைசி போட்டியில் 227 வித்தியாசத்தில் வென்று தக்க பதிலடி கொடுத்து ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்தது. அதை தொடர்ந்து நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கும் இந்தியா 2 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்து ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராகியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரில் ஏற்கனவே புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் இந்தியா 2 – 0 (2) என்ற கணக்கில் நிச்சயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது.

இருப்பினும் கேப்டன் ரோகித் சர்மா, முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறிய இத்தொடரில் துணை கேப்டன் கேஎல் ராகுல் இந்தியாவை வழி நடத்துகிறார். மறுபுறம் ஒருநாள் தொடரிலேயே அசத்திய வங்கதேசம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை ஏற்கனவே இழந்தாலும் சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்டு மீண்டும் இந்தியாவை தோற்கடித்து இத்தொடரின் கோப்பையும் வெல்ல போராடவுள்ளது. எனவே ராகுல் சுமாராக கேப்டன்ஷிப் செய்பவர் என்பதால் அவரது தலைமையில் 3வது போட்டியில் இஷான் கிசான் அதிரடி காட்டியது போல இதர வீரர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இந்தியா வெற்றி காண முடியும்.

- Advertisement -

சட்டகிரோம் மைதானம்:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகள் இது வரை மோதிய 11 போட்டிகளில் 9 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா வலுவான அணியாகவே திகழ்கிறது. 2 போட்டிகள் டிராவில் முடிந்தது. வங்கதேசம் இது வரை ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. குறிப்பாக இத்தொடர் நடைபெறும் வங்கதேசத்தில் 8 போட்டிகளில் விளையாடிய இந்தியா 6 வெற்றிகளை சுவைத்து 2 போட்டிகளை டிரா செய்தது. இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14ஆம் தேதியன்று சிட்டகாங் நகரில் இருக்கும் சட்டோகிராம் நகரில் உள்ள ஜாஹுர் அஹமத் சவுத்ரி மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்குகிறது.

வரலாற்றில் இந்த மைதானத்தில் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வங்கதேசம் 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. 13 தோல்விகளை சந்தித்தது. 7 போட்டிகள் டிராவில் முடிந்தன. இந்த மைதானத்தில் வங்கதேசத்தை 2 போட்டிகளில் எதிர்கொண்ட இந்தியா 1 வெற்றியும் 1 ட்ராவையும் சந்தித்துள்ளது. இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 413/8 டிக்ளேர். குறைந்தபட்ச ஸ்கோர் 242 ஆல் அவுட்.

- Advertisement -

இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் (253) மற்றும் சதங்கள் (2) அடித்த இந்திய வீரராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார். இந்த மைதானத்தில் அதிக விக்கெட்களை (7) எடுத்த இந்திய பவுலராக அமித் மிஸ்ரா உள்ளார்.

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் சிட்டகாங் நகரில் போட்டி முடியும் டிசம்பர் 18ஆம் தேதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று அந்நாட்டு வானிலை மையம் தெரிவிக்கிறது. கடைசி 2 நாட்களில் மட்டும் லேசான மேகமூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் மைதானம் வழக்கமான இந்திய துணை கண்டத்து மைதானங்களை போலவே இருக்கும். அதாவது முதல் 2 – 3 நாட்கள் வரை பேட்டிங்க்கு அதிக சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இம்மைதானம் கடைசி 2 நாட்களில் சுழலுக்கு சாதகமாக அமையும் என்று நம்பலாம். குறிப்பாக இங்கு நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இசான் கிசான் அதிரடியாக விளையாடி இரட்டை சதமடித்தது போல ஆரம்பக்கட்ட நாட்களில் நல்ல திறமையை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்கள் இங்கு பெரிய ரன்களை குவிக்கலாம்.

இதையும் படிங்க: வீடியோ : தோல்வியால் பென் ஸ்டோக்ஸ்’க்கு கை கொடுக்க மறுத்த பாக் வீரர் – நாகரீகமற்ற செயலால் ரசிகர்கள் அதிருப்தி

அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுப்பார்கள். இருப்பினும் இந்த போட்டியின் வெற்றியை ஸ்பின்னர்கள் தான் தீர்மானிப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். குறிப்பாக ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற அனுபவமிக்க ஸ்பின்னர் இப்போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement